யாகூவும் கூகிளும் இணைந்தன

Written by தமிழ்பித்தன் on 7:20 PM



யாகூவும் கூகிளும் யாரும் எதிர்பாராத விதமாக தாம் இணைந்து கொண்டதாக சற்றுமுன் அறிவித்தன இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்த இருநிறுவனங்களின் தலைவர்களும் அதனை உறிதிப்படுத்தும் விதமாக இரு தளங்களையும் பிரதிபலிக்க தக்க வகையில் ஓர் தேடு பொறியையும் அறிமுகம் செய்தனர் http://www.gahooyoogle.com/ ஆனாலும் அந்தந்த தேடு பொறிகள் தொடர்ந்து இயங்குமெனவும் தத்தம் வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல இங்கே நகர்த்தப் படுவார்கள் எனவும் அறிவித்தன ஏன் திடீர் முடிவு எனக் கேட்ட செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த யாகூவின் தலைவர் தாம் இதற்கு முன் micro soft உடன் messenger தொடர்பாக ஒர் ஒப்பந்தம் செய்திருந்தோம் அதன்பின் சில காரணங்களுக்காக எமக்கு முறிவு ஏற்பட்டது அதன் வெளிப்பாடே இது வெகுவிரைவில் மின்னஞ்சல் புளொக் போன்றவற்றிலும் இணைந்து செயற்படுவோம் என்றார் micro softக்கு எதிராக வெகுவிரைவில் அனைத்திலும் இணைந்து சிறப்பாக செயற்படுவொம் இயங்குதளம் சார்பான ஆராட்சியிலும் ஈடுபடுவொம் என்றும் கூறினார்
இது பற்றி மேலதிக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன அவர்கள் இணைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன அவற்றுடன் மீண்டும் விரிவாக எழுதுகிறேன்
இச்செய்தியால் பில்கேட்ஸ் என்ன அடுத்து செய்வது என்று தெரியாமல் விழிப்பார் என்று தெரிகிறது

நன்றி இது தமிழ்பித்தனின் முட்டாள் தினச் செய்தி அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் ஆனால் ஏதே அந்தத் தளம் மட்டும் உண்மை யாரோ வேலையற்றவன் தயாரித்து வெளிவிட்டான் 7 மாதங்களுக்கு முன் அதை இப்படியாக சிந்தித்து வெளிவிட்டேன்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ யாகூவும் கூகிளும் இணைந்தன ”

  2. By பொன்ஸ்~~Poorna on April 1, 2007 at 10:50 PM

    ஒரு நிமிடம் நம்பிட்டேன்.. அந்த சைட் வேற காரணத்திற்காக, யாஹூ கூகிளை ஒரே நேரத்தில் தேடி ஒப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது :)

  3. By பாரதி தம்பி on April 2, 2007 at 4:38 AM

    தொழில்நுட்ப அறிவு குறைவான எங்களைப் போன்ற ஆசாமிகள் இதை நம்பி தொலைத்துவிடுவோம்.