மாயாவின் மயூரனுக்கு கண்டணம்! மொக்கை வாழ்க கும்மியும் வாழ்க!

Written by தமிழ்பித்தன் on 7:04 AM

இன்று மாயா வலைப்பூ மயூரன் அவர்கள் ரெம்ப அழுது புலம்பி தள்ளிட்டாரு. நம்ம மொக்கைகளையும் கும்மியையும் இழிவாக தரம் குறைச்சு பேசிட்டாரு. இதனால், நம்ம மொக்கைகள் கும்மிகள் ரெம்ப மனம் நெந்து இருப்பதாக அறிக முடிகிறது.

மயூரன் அண்ணா நீங்கள் பெரிய எழுத்தாளர் தரத்தில் எழுதுபவர்கள் எங்களுக்கு அப்படி எல்லாம் எழுத தெரியாது. நாங்கள் புகையிலை இடுக்குகளில் சிறிதாக தெரிகிற கிளை ஒடித்து விட்டு களைப்பில் ஆலமர நிழலில் வெட்டிப்பேச்சு பேசித்தானையா பழக்கம் எங்களுக்கு, உங்களை மாதிரி தத்துவம் அறிவியல் சிந்தனை எல்லாம் ஒத்து வராத விசயம் நாங்களும் வலைபதிகிறோம். என்கின்ற ஒரு பெருமைக்காக ஏதோ தட்டவிழைகிறோம். அது உங்களை எரிச்சலூட்டி அழவைக்கும் என்று சத்தியமாக நாம் நினைத்ததில்லை.

ஆரம்பத்தில் எழுத வேணும் என்று ஆசைப்பட்ட போது பத்திரிகைகளுக்கு அனுப்பினோம் அவை நிறைவேற வில்லை. ஆனாலும், பாடசாலையில் ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். மாதம் ஒரு இதழ் வெளியிடுவது என, முதல் தடவையாக அன்று அச்சில் வந்த எனது எழுத்துக்களை கண்ட மகிழ்சிதான், இன்றும் தொடர்கிறது, இந்த வலைப்பூவில்.ஒருடத்தையும் விடுகிறார்கள் இல்லை என்றுதானே இங்கே வந்தோம் இங்கேயிருந்தும் விரட்டினால் எங்கே பொவோம்.

கேளரவம் படத்தோனியில் சொல்வதானால் "மயூரா போக வேணும் என்றுதான் தோனுது எனக்கு தமிழ் மணத்தை விட்டால் யாரை ஐயா தெரியும் நான் யாருட்ட போக"

இனி விசயத்துக்கு வருவோம். ஆரம்பத்தில் நானும் யாழ்பாணத்திலிருந்து பதிந்து கொண்டிருந்த கால கட்டத்தில் நன்றாக தத்துவம் கவிதை என வெட்டியாக சிந்தித்து எழுதுவதுண்டு. ஒரு ஆங்கில கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஒருவன் தத்துவம் கதைக்கிறான் எனின் அவனுக்கு தனிமையில் சிந்திக்க நேரம் இருக்கிறது. அது போலவே நானும் ஒரு பொறுப்பற்றவன் என்று கூறியிருப்பார்.
கிடைக்கிற நேரத்தில் உங்கள் மாதிரியானவர்களின் நல்ல வலைப்பூக்களையும் களைப்பும் மனச்சுமை நீங்க சில மொக்கைகளையும் வாசித்து விட்டு என்ன எழுத தோன்றுகிறதோ அதையே கிறிக்கி விட்டு செல்லகின்ற ஜாதி ஐயா நாங்கள்.

உங்களுக்கு திடீர் ஞானோதயத்துக்கு காரணம் என்ன????

///இவ்வாறனவர்களின் பதிவுகளால் தான் " ஆச்சி மசாலா உமா " (அதாங்க பெப்சி உமா ) வரை Bloging ஐ குறை சொல்லும் நிலைக்கு கொண்டுபோய்விட்டது///


ஆச்சி மாமியை திட்டியமையா??? (நீங்கள் அவர் தீவிர ரசிகர் என தெரியாது எங்களுக்கு)

பின்னூட்டம் அதிகம் தேவையானால்
உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட வேலைக்கு யாரையாவது அமர்த்தலாமே??

நல்ல ஒரு பதிவுக்கு பின்னூட்டம் எதற்க்கு அதை வாசித்தவர் பயன் அடைகிறார்கள். எத்தனைபேர் வாசித்தார்கள் என்பதற்ககு கணிப்பான் இருக்கிறது.

எங்களை மாதிரி மொக்கைக்கும் கும்மிக்கும் ஆயிரம் மாற்றுக்கருத்து இருக்கும் அவர்கள் எங்களை திட்டி சபித்து விட்டு செல்ல பின்னூட்ட வசதி பயன்படுகிறது.

////கொஞ்சம் நல்லா எழுதுறவங்களும் வலையுலகை விட்டு விலகிப்போவது நிஜமான வலையுலகவாசிகளுக்கு மாபெரும் இழப்பு..///

அப்படியா??
சாதாரண வலைப்பதிவில் எதிர்த்து நிலைக்க தென்பற்றவர்கள். நாளை வாழ்க்கையில் வீசப்போகிற சூறாவளிக்கு எவ்வாறும் முகம் கொடுக்க போகிறார்கள்.

///ஒரு வலைப்பதிவர் எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதாமல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பதிவுகள் தொடஙகலாம் அதேமாதிரி திரட்டிகளையும் தொடங்கலாம் . . . //

இதற்கு எனது ஆலோசனை நீங்கள் தமிழ்மணத்தின் வகைப்படுத்தியவையை பயன்படுத்தலாம் அவ்வகைப்படுத்தலில் புதிதாக ஏதாவதை சேர்க்க விரும்பினால் தமிழ்மண நிர்வாகிகளுக்கு அறிவியுங்கள். அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது நீங்கள் வாசிக்க விரும்பும் வலைப்பூவை கூகிள் ரீடரில் சேமித்து வைக்கலாம். அல்லது ஒரு திரட்டியை நீங்களே வடிவமைக்கலாம் அதற்க்கு ரவிசங்கர் உதவுவார்.

///இனி என்றாவதொருநாள் வலைப்பக்கங்களுக்குள் நுழையும் போது தேநீர் கடையில் நடக்கும் ஒரு அரசியல் சண்டை போன்று ஒரே கூச்சலும் குழப்பமுமாக இல்லாது . ஒரு தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் நுழைந்த உணர்வு மட்டுமே ஏற்படும் சூழ்நிலை உருவாகும் , இந்த இணையப் பதிவு எனும் " நல்லதோர் வீனையை ". . .நலமுடன் பேணுவார்கள் என்ற நம்பிக்கையேடு///

ஏனையா வீணை கீணை என்று பழசோடையெல்லாம் வலைப்பூவை ஒப்பிடுகிறீர். இது நவின யுகத்து ரம்செட் போன்றது.
விவேக் சொல்லது போல தூக்கிப் போட்டு குத்துங்கோய்ய்ய்ய...யா...........

எங்கே எனது அறுஞாகொடி? (நினைவில் மலர்பவை 3)

Written by தமிழ்பித்தன் on 7:14 AM

அறுஞா கொடி என்றால் முதல் விளக்கம் கொடுக்க வேணும் பாருங்கோ பேந்து அது தெரியாமல் இது வாசிச்சு பிரியோசனம் இல்லை. அறுஞா கொடி என்றால் சிறு வயது ஆண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டப்படுகின்ற ஓரு கறுத்த கயிரோ அல்லது பவுனில் செய்ததாகவோ இருக்கலாம். சுந்தரா ரவல்ஸ் படத்தில் முரளி கடனை அடைக்க இதைத்தான் அறுத்து கொடுப்பார்.

நான் அறிகிற வயசில் நான் அணிந்து கொண்டது பவுனால்தான் இருந்தது. அந்த காலத்தில் அதை வெளியே தெரிய காட்ட வேணும் என்று கால்சட்டையை இடுப்புக்கு கீழே இறக்கிவிடுவதுண்டு. (இங்க கறுவல்களோடே சேர்ந்து நம்மடையளும் ஜீன்சை முழங்காலுக்கு கீழ விட்டு நடக்கமாட்டாமல் திரியுதுகள் அதுகள் என்னத்தை காட்ட ஆசைபடுதுகளோ?)

இப்படியான காலத்தில் தான் விடுதலைப்புலிகளும் இந்தியராணுவமும் மேதியதன் விளைவு அதுவரை இந்தியா ஈழப்போராட்டத்துக்கு வழங்கி வந்த உதவியை நிறுத்திக் கொண்டது. புலிகள் சொந்த காலில் நிற்க வேண்டிய நிலமை முதல் முதலில் நிலமை என்பதால் அதை உடனடியாக சமாளிப்பதற்காக மக்களிடமிருந்து நேரடியாக பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.பின் குழுக்கல் முறையில் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள்.

அதே நேரம் மக்கள் பெரும் பொருளாதாரப் பிரச்சினையை எதிர் நோக்கியிருந்த நேரம் மக்கள் பணம் தற்போது இல்லையே என்று எதிர்ப்பை தெரிவிக்க முற்பட்ட வேளையில் அதற்க்கு மாற்றாக 2 பவுன் தரலாம் என்று அறிவித்திருந்தது. இதை அறிந்த அப்பா வீடு வந்து இதை பற்றி அம்மாவுடன் ஆலோசனை கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்தார். நானும் அப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் வழமைபோல் காற்சட்டை இடுப்புக்கு கீழே தான் இருந்தது. எனது அறுஞா கொடி அப்பாவின் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
"வாடா செல்லம் குளிக்கப் போவம்" என்று கூறி (அப்பவும் யோசித்தனான் இந்தாள் ஒரு நாளும் குளிக்க வார்ப்பதுகிடையாதே என்று அப்ப அந்த சிறு மூளைக்கு எட்டவில்லை) குளிக்க வார்த்துக் விட்டு கத்தரிக்கோல் அறுஞா கொடியை கத்தரித்து எடுத்தார். ஏன் அறுக்கிறாய் என்று கேட்டதற்க்கு பிள்ளைக்கு இதை விட பெரிசா போடுவம் என்று சொல்லி விட்டு சென்றார். இதை நான் அம்மாவிடம் முறையிட அவா இயக்கம் கேட்கிறாங்கள் கொடுப்பம், திருப்ப தருவாங்கலாம்.

"என் வாழ்வின் முதல் இழப்பு அதுதான்"

அப்ப விட்டுப்போனது இன்று வரை அது இல்லை அது எங்கே??

இந்திய மண்ணே வணக்கம்

Written by தமிழ்பித்தன் on 8:53 AM

இந்தியாவுக்கு வயது 60 வது
ஓய்வு வெறும் வயதிலும்
சீறி யெலும் காளை போல்
கலக்க தொடங்யிருக்கு இப்போதான்

லேட்டா வந்தாலும் லேட்டஸா வளரும் நாடிது
பாரதா மாதா நீ வளரு படு யோரா
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று
தொன்று தொட்டு இன்று மட்டும் நீ காட்டினாய்

ஆன்மீகத்துக்கு ஒரு புத்தன்
அகிம்ஸைக்கு ஒரு காந்தி
அறிவுக்கு ஒரு அப்துல்கலாம்
அர்பணிப்புக்கு ஒரு கோடி...

அனைத்து இந்திய வாழ் மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இன்று அதிகாலை எம் வீடு தட்டி இனிப்பு வழங்கிய அந்த இந்திய சகோதரனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
(புலம் பெயர்ந்தாலும் தம்தேச வழமைகளை அவர்களும் இன்னும் தொடர்வதை கண்டு மகிழ்ச்சி)
புலம் பெயர்ந்து வாழும் இந்தியருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஓசை செல்லா போல் "நச்" சென்று காரணம் சொல்ல முடியாமல் தவிப்போருக்கு

Written by தமிழ்பித்தன் on 7:55 AM

///நான் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு காமிராவிலே கருத்தாய் இருந்தபோது நடந்திருக்கலாம் இது. இல்லையேல் மாலனின் கருத்தை அங்கேயே எதிர்த்திருப்பேன். ///என்று ஓசை செல்லா http://tamilbloggers.org/blog/?p=29 என்ற பதிவில் பின்னூட்டியிருந்தார் ஓசைசெல்லா உடனடியாக நல்ல காரணத்தை கண்டுபிடித்து தெரிவித்தமை அவரது திறமையை பறைசாற்றுகிறது பலர் அப்படியான காரணங்களை கண்டுபிடிக்க கஸ்டப்படலாம் அவர்களுக்காக சில ரிப்ஸ்



1)முதல் நாள் தின்ற நாறிப்போன இட்லி வடை வயிற்றை கலக்கியது எனலாம்

2)மாலனின் பேச்சு போரடித்தனால் பேச்சின் ஆரம்பத்திலேயே தூங்கிவிட்டேன் எனலம்

3)தொலைபேசியில் மனைவி/ உறவினர்கள் / நண்பர்கள் அழைத்தமையால் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன் என்று கூறலாம்

4)நல்ல பிகர் ஒன்று வந்தது அதைப் பார்த்து வழிந்து கொண்டிருந்தேன் என்று கூறலாம்


அடுத்த முறை இப்படி வரம்பு மீறி பேசுபவர்களை கட்டுப்படுத்த சில ரிப்ஸ்
1)கராத்தே படித்த பல வலைப்பதிவர் இருக்கிறார்கள் அவர்களை பட்டறைக்கு அழைக்கலாம் வெளிநாட்டிலிருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்(பேசுபவர் எல்லை மீறும் போது அடித்து உதைத்து வெளியே அனுப்ப)

2) அவர்களின் கையில் கறண்டை கட்டிவிட்டு அழுத்தியை நிர்வகிப்பவர் வைத்துக் கொண்டு அளவை மீறும் போது கறன்ட் சாக் பாச்சி அவரை கட்டுப் படுத்தலாம்

3)நீங்களே பேசுபவருக்கு அனாமி அழைப்பு எடுத்து மிரட்டலாம்(எல்லை மீறி பேசினால் கொலை செய்வோம் என)


"இதை கும்மியாகவோ மொக்கையாகவோ பார்க்க விரும்பாதவர்கள் உடனடியாக இப்பதிவை மூடும் படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்"

மாலன் சொன்னதை புரிந்து கொள்ளாத பெயரிலியும் ஈழத் தமிழ் பதிவர்களும்

Written by தமிழ்பித்தன் on 6:52 AM

மாலன் அவர்கள் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல ஏன் சிறிலங்காவின் பாஸ்போட்டை பயன்னடுத்துகிறார்கள் என்று பதிவர் பட்டறையில் கேள்வி எழுப்பி இன்று வலைப்பதிவு உலகில் சுப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்திட்டார். ஆனால் அவர் ஏன் அப்படி கேட்டார் என்பதை பற்றி அலசாமல் எல்லோரும் தம்பாட்டுக்கு அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஈழத்தமிழர் சிறிலங்காவின் பாஸ்போட்டை பாவித்தே வேளிநாடு அல்லது இந்தியாவுக்கு தற்காலத்தில் செல்லமுடியும் ஆகவே அவர்களை பார்த்து ஏன் சிறிலங்காவின் பாஸ்போட்டை பாவிக்கிறீர்கள் என்று கேட்டதை ஏன் வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.அவர் சொன்னதற்கான காரணங்களாக இருக்கக் கூடியவையை

1)அவர்கள் வெளிநாடு சென்று குடியேறி விடுவதால் அவர்களின் அடுத்து தலைமுறை தமிழை மறந்து விடுவார்கள் ஆகவே தமிழ் அழிவுறும் என்று கவலையுறலாம்

2)எல்லா தமிழர்களும் வெளியேறி விட்டால் விடுதலை புலிகள் பேராட்டத்துக்கு ஆள்சேர்க்க முடியாதே என வருத்துமுறலாம்

3)வெளிநாட்டிலிருந்து சென்ற பதிவர் யாராவது அவருக்கு பரிசில் பொருட்கள் இன்றி சந்திக்கப் போயிருக்கலாம்.

4)அவர்களின் உறவினர்கள் இந்தியாவிலேயே தங்குவதால் அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தால் பணவீக்கம் அதிகரிக்குமோ என அஞ்சலாம்.

5)ஈழத்தமிழர்கள் புலம்பெயரவதனால் பத்திரிகை தொழில் பாதிக்குமே என அஞ்சலாம்

6)வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சரவணாஸ் ஸ்ரேரில் அடிவாங்கியதால் புலம்பெயராவிடின் இந்நிலமை ஏற்பட்டிருக்காது, என நினைத்திருக்கலாம்.

மொத்தத்தில் அவருக்கு ஈழத்தமிழர் மீது அலாதிப்பிரியம்

நான் முதல் பார்த்த நீலப்படம் (நினைவில் மலர்பவை பாகம் 2)

Written by தமிழ்பித்தன் on 8:48 AM

அப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.
பத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்

அக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)

சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்


அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம் ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினை
அப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.

அக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்

அன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள

* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது

* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது

அவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்

*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்

*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணமாம் )

பலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)

இவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்
ஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்

பேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்

"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே"

ஹி..ஹி..சிரிங்க

Written by தமிழ்பித்தன் on 7:17 AM

ஒருவர் முடி திருத்தும் கடை நடத்திவந்தார் அவரிடம் வேலை பழக ஒரு சிறுவனும் இருந்தான் அவன் அவருக்கு எடுபிடி என்றே கூறலாம்.(குருவல்லவா வேலை பழகுவதானாலே இப்படித்தானே)

ஒரு நாள் மதியம் ஒரு மணியளவில் ஒரு இளைஞன் வந்து "அண்ணை முடி வெட்ட வேணும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்" என்றான். அதற்க்கு அவர் "தம்பி நான்கு பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வெட்டி முடியவேணும் எப்படியும் ஒன்ரரை மணிநேரமாவது எடுக்கும்" என்றார்.

அதற்கு அவன் "அப்ப நான் அண்ணை உதுல போய் ஒரு இளநீ குடிச்சிட்டு வாறன்" என்று கூறி சென்றான் ஆனால் அவன் வரவில்லை மறுநாளும் இப்படியே அவன் வர மூவர் இருந்தனால் தான் இளநீ குடித்து விட்டு வருகிறேன் என்று கூறினான்

இப்படியாக நான்கைந்து நாட்கள் நடந்தன ஒரு நாள் பெறுமையிழந்த அவர் இவன் செல்ல விட்டு தன் எடுபிடியை கூப்பிட்டு

"அவன் உண்மையில் இளநீ குடிக்கத்தான் போகிறான? அல்லது வேறே எங்காவது போகிறானா? என்று பார்த்துவா"
என்று அனுப்பினார் அவனை பின்தொடர்ந்து சென்றவன் அறக்கப்பறக்க ஓடியந்து

""அண்ணை.. அண்ணை ...அவன்""

"என்னடா உளறாமல் சொல்லடா''

""அவன் உ..உங்..உங்கட வீட்டை அண்ணை பொறான்"'

" ஆ..ஆ....ஆ..ஆ.....என்ர வீட்டை தென்னையே இல்லையேடா....?"

;;;எச்சரிக்கை;;;((தமிழ்மணத்தில் வைரஸ் தாக்கம்))

Written by தமிழ்பித்தன் on 7:29 AM

சில காலமாகவே இந்த தொற்று இருப்பதாக அறியப்பட்டாலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது.........ஆரம்பத்தில் நன்றாக தான் இயங்கியது தமிழ்மணம் (2005க்கு முன் என்று வரையறுக்கலாம்) பதிவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது எல்லோரும் ஒன்றாக செயற்பட்டார்கள். ஆனால் பிற்பட்ட காலத்தில் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க குழுக்கலாக பிரியும் தன்மை அதிகரித்தது.



அப்படி அண்மையில் தமிழில் பற்றுக்கொண்ட ஆச்சி கும்மி பதிவுகளுக்கு அதிக பின்னூட்டம் வருவதாகவும் தனக்கு பின்னூட்டங்கள் வருவதில்லை எனவும் ஆதங்கப்பட்டு ஓர் பதிவு போட்டார்(ஆச்சி சீரியஸ்சான பதிவராம் நான்கு மாதத்துக்குள் நானூறு பதிவு பொட்டு சாதனை படைத்தவராம்). அதற்க்கு ஓசையால் ஓலம் எழுப்பினார் ஒருவர்.

அதற்க்கு தமிழில் பற்றுக்கொண்ட ஆச்சிதான் கராத்தேயில் எடுத்த பதக்கத்துடன் எல்லாம் படம் போட்டார். எல்லோரும் எதிர்பார்த்தார்கள் மற்றவர் வீரப்பனுடனோ அல்லது பில்லாடனுடனோ எடுத்த புகைப்படத்தினை பிரசுரிப்பார். என ஆனால் அது நடக்கவில்லை (பேந்து போட வாடாவில் அவர் உள்ள போய் வாடி வதங்கி விடுவேன் என்ற பயம் இருக்கலாம்) பின் கும்மி பதிவராக அவரை தெரிந்து ஒரு பதிவு வந்தது. அவர் சில காலங்களுக்கு முன் உணர்சிகளால் பாதிக்கபட்டவர் (பின் உணர்ச்சி அடங்கியது வேறகதை) வேறுசிலர் ஆச்சிக்கு ஆதரவு குரல் எழுப்பினர் இது அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இது போல பல நிகழ்வுகள் நடந்தன. அனைத்தும் ரசிக்க கூடியவையாகவே இருந்தவை என்பதில் மறுப்பில்லை அவையே எல்லைகள் மீறும் போது சில நல்ல பதிவர்களை நாம் இழக்க கூட நேரிடலாம்.

"கும்மியடிப்போம் ஆனால் குட்டையை குழப்பாமல்"

கும்மிப்பதிவர் சங்கம் இதை கும்மி பதிவாக ஏற்றுக் கொள்ளுமா???????


வேண்டுகோள்:- இந்த பதிவை பார்த்து விட்டு ஆயுதங்களுடனே அல்லது காரத்தே சிலம்பம் குங்பூ போன்ற கலை பயின்ற படியோ தயவு செய்து பதிவு போடாதீர்கள் என்னால் பதிலுக்கு பதிவு போட படங்கள் இல்லை ஒட்டப் போட்டியில் ஓடுவது போலதான் படப்பதிவு போட முடியும்

""நாமலும் மொக்கை போடுவோமல்ல"""