வலையுலகில் நேரடி ஒலி அஞ்சல்

Written by தமிழ்பித்தன் on 4:32 AM

தமிழ் வலைப்பூ வரலாற்றில் ஒர் அளப்பெரிய சாதனை ஆமாம் தமிழ் வலையுலகில் முதல் தடவையாக ஓர் வலைப்பூ வானொலி அறிமுகம்

"வலைப்பூவோசை "

உங்கள் தணியாத இசைத்தாகத்தை ஒரு மணிநேரத்தினுள் தணிக்க வருகிறது வலைப்பூவோசை
உங்களுடன் ஒட்டிநின்று உறவாடி உங்களை மகிழ்விக்க வருகிறது
* நீங்கள் நேரடியாக பங்கு பெறலாம்

*பாடல்கள் விரும்பிக் கேட்கலாம்
*உங்கள் வலைப்பூ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்
*கவிதை நகைச்சுவைகளை பகிரலாம்
அனைத்தையும் வழங்க வருகிறது வலையோசை

கானாபிரபா தமிழ்பித்தன் கூட்டுத்தயாரிப்பில் வலையோசை வானொலி தமிழ்வலைப்பூ வரலாற்றில் ஒர் மைல்கல்

குரல் வளத்துக்கு கானாபிரபா நகைச்சுவை தமிழ்பித்தன்

அறிவிப்பாளர்கள்:- வலைப்பூவின் றேடியோபதி புகழ் கானபிரபா மற்றும் உங்கள் அன்பின் செல்லப்பிள்ளை தமிழ்பித்தன்(பிழைவிட்டாலும் தண்டிக்க கூடாது செல்லபிள்ளைதானே)

*தொழில் நுட்பம் மற்றும் நேரடி ஒலிபரப்பு (தமிழ்பித்தன் கலைக்கூடம்)
*ஒலிப்பதிவு மற்றும் மீள் ஒலிபரப்பு (றேடியோஸ்பதி ஒலிக்கூடம்)


எப்படி கேட்பது
நீங்கள் கட்டாயம் ஸ்கைப் மசஞ்சர் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்
ஸ்கைப்பை தரைவிறக்க skype
(இல்லா விட்டால் மீள் ஒலிபரப்பைத்தான் கேட்க வேண்டும்)
நீங்கள் ஸ்கைப்பில் இணைந்திருக்க வேண்டும் நாங்கள் தருகின்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் எமது வானொலிக்கு அழைத்துந் செல்லப்படுவீர்கள்
அங்கே சென்று நீங்கள் கேட்க மட்டும் விரும்பினால் கேட்டுக்கொண்டு இருக்கலாம் எங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் மசஞ்சரின் வலது மூலையில் காணப்படுகின்ற talk என்பதை அழுத்த நீங்கள் waiting என்பதற்குள் அனுமதிக்க படுவீர்கள் பின் கட்டுப்பாளர் உங்களை தெரிவு செய்து உள்ளே நுழைய அனுமதிப்பார்

ஸ்கைப் வசதியில்லாதவர்கள் பின்னூட்டத்தினுடாக கருத்துகளையும் வாழ்த்துகளையும் சொல்லி பாடல்களையும் விரும்பிக் கேட்கலாம்


அடித்தளம் இட்ட விடயம்
நாம் முதலில் விண்டோஸ் பிளேயர் ஊடாகவே ஒலிபரப்புவது என்று இருந்தோம்

அதைவிட்டு விலகியமைக்கு காரணம்
அதன் ஒலிபரப்பில் தெளிவின்மை(24kb/s)
குறைந்த பார்யைாளரை மட்டுமே ஏற்கும்(75)
அதிக தொழில் நுட்பத்திறன் வேண்டும் (ஒலிபரப்பின் போது தனிய இதனுள்ளே முடங்க வேண்டும்)

இதை தெரிவு செய்ததற்கான காரணங்கள்
மிகத்தெளிவான ஒலிநயம்
நேயர்களை இணைப்பது இலகு
ஒரே நேரத்தில் 5 பேர் வரை கலந்துரையாடலாம்
வரையறையற்ற பார்வையாளர்கள்



இது தற்சமயம் பரிசார்த்த ஒலிபரப்பு
இங்கே அழுத்தி இணையுங்கள்

உங்கள் ஏமாற்றத்தை தவிர்க்க பின்னூட்டத்தில் உங்கள் skype ¸பெயரை இடவும் இதனால் உங்கள் ஏமாற்றம் தவிர்க்கப்படலாம்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 4 கருத்துக்கள்: Responses to “ வலையுலகில் நேரடி ஒலி அஞ்சல் ”

  2. By சினேகிதி on April 27, 2007 at 7:55 AM

    aha nalla visayam!!! vaalthukul prabanna n pithan!

  3. By கொழுவி on April 27, 2007 at 8:21 AM

    //prabanna n pithan!//
    அதென்ன பிரபாக்கு அண்ணா பித்தனுக்கு வெறும் பித்தன்..

  4. By தமிழ்பித்தன் on April 27, 2007 at 1:10 PM

    கொழுவி பெரிய கண்டுபிடிப்பெண்டு நினைப்போ பட்டங்களுக்கு முன் ஏனையா பேந்தும் ஓர் பட்டத்தை,
    உதாரணமாக அண்ணன் ரஜனிகாந் சொல்லாம். அண்ணன் சுப்பஸ்ரார் என்று சொல்லுவது கிடையாது. அதே போல கோபி என்ற எனக்கு தமிழ்பித்தனே ஓர் பட்டம் தானே பேந்து எதற்கு அண்ணா தம்பி எல்லாம்.
    இதெல்லாம் எப்ப புரிந்து ஆண்டவா இவர்களிடமிருந்து வலைப்பூக்களை காத்து அருளும்

  5. By கொழுவி on April 27, 2007 at 1:48 PM

    //உதாரணமாக அண்ணன் ரஜனிகாந் சொல்லாம். //
    அட.. உங்கடை அண்ணனுக்கும் ரசினிகாந்தோ பெயர்..? எனக்கு பிடிச்ச நடிகர் ஒருவர் இருக்கிறார். அவருக்கும் ரசினிதான் பெயர்.

    //இதெல்லாம் எப்ப புரிந்து ஆண்டவா இவர்களிடமிருந்து வலைப்பூக்களை காத்து அருளும்//

    இதை சத்தமாகப் படித்துப் பாத்தன். எனக்கு அர்த்தம் வேறை மாதிரி விளங்கிச்சு. அது சரி. அர்த்தம் ஆளுக்காள் மாறுபடும்தானே..