எனது முதல் உரையாடல்(BETA)

Written by தமிழ்பித்தன் on 9:32 PM

இது வரை சயந்தனும் சோமியும் தாங்கள் இருவரும் கதைத்து பதிவுகள் வெளிவிடுவது வழக்கம்
((சொதி எப்படி செய்வது வெகுவிரைவில் சம்பல் புட்டு என்பவற்றையும் எதிர்பார்க்கலாம் அதற்க்கு வாலி சீ சோமியின் பாட்டும் ரெடியாம்
புட்டுக்குத்தவா மச்சாள் புட்டுக்குத்தவா
வெறும் கூப்பன் மா
புட்டுக்குத்தவா))
அதை எப்படி உருவாக்கினார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது அவற்றை அவர்கள் வெளிவிடவும் இல்லை நான் இது பற்றி சயந்தனிடம் தனிப்பட்டமுறையில் வினாவிய போது அது தனிப்பட்ட ரகசியம் என்றார்.அப்போது சயந்தனிடம் உறுதியளித்தேன் நீங்கள் ஒரு வார காலத்துக்குள் அதுபற்றிய பதிவை வாசிக்க நேரிடும் என்று இன்று 5 நாட்களே கடந்த நிலையில் இந்தப்பதிவு ஆனாலும் இந்தத் தொழில் நுட்பத்தைத் தான் சயந்தன் பயன்படுத்துகிறார் என்று உறுதியாக சொல்ல முடியா விட்டாலும் அதற்க்கு நிகராக இது விளங்கும் என்னபதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம் எமது கிழே உள்ள பதிவில் சில இரச்சல்கள் இருக்கலாம் அதற்க்கு காரணம் எமது தரமற்ற ஒலிவாங்கியே இதே இரச்சலை நீங்கள் எனது தனிப்பட்ட பதிவிலும் காணலாம் பலர் தாங்கள் போன் மூலம் கதைத்து பதிவு போட முயன்றார்கள் அது அவ்வளவாக வெற்றி பெறாததனால் பின் வாங்கினார்கள் தமிழ்பித்தனின் ஒரு வார கால முயற்சிக்குப் பின் இது வெற்றியளித்துள்ளது இன்று நாம் பதிந்ததை கெளுங்கள் உங்களுக்கு பிடித்தால் மட்டும் சொல்லுங்கள் அதை எப்படி செய்வது என்பதை நாளை விளக்குகிறேன் ஆரொக்கியமான வலைப்பதிவுப் போட்டிக்கு இது அடித்தளம் ஆகலாம் இது வரை அவர்கள் மட்டும் இருந்ததினால் ஒரு போட்டியற்ற சூழ்நிலை இருந்தது அது மாற வேண்டும் அதில் திறமையுள்ளவர்கள் அவற்றை வெளிக்கொண்டுவரவெண்டும் அதற்க்கு தொழில்நுட்பம் தடையாக அமையுமானால் அப்படியான எத்தடைகளையும் தமிழ்பித்தன் உடைத்தெறிவான்


பொறாமையற்ற போட்டியுள்ள உலகம் என்றும் ஆரோக்கியமானதே

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 13 கருத்துக்கள்: Responses to “ எனது முதல் உரையாடல்(BETA) ”

  2. By Anonymous on April 9, 2007 at 11:25 PM

    flop :(

  3. By வடுவூர் குமார் on April 10, 2007 at 12:19 AM

    ஓஹோ!! அதுக்குத்தான் ஹாட்மெயிலில் கூப்பிட்டீர்களோ?
    உரையாடல் சில சமயம் ஒன்றின் மீது ஒன்று பதிவது போல் உள்ளது.

  4. By சயந்தன் on April 10, 2007 at 2:49 AM

    //அதை எப்படி உருவாக்கினார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது அவற்றை அவர்கள் வெளிவிடவும் இல்லை//

    ஐயா ராசா நான் எங்கே ஐயா சொல்ல மாட்டேன் என்றேன்..? இருவர் தொலைபேசியில் பேசும் போது அல்லது மூவர் பேசும் போது அது பதிவு செய்யப்பட்டு வெளியிடப் படுவது வானொலி காலத்து வழக்கம். இதில் பரம மற்றும் சிதம்பர ரகசியம் எதுவுமேயில்லையே..

    ஆண்டவரே.... ம்.. சரி.. முருகா என்னை இவர்களிடமிருந்தும் காப்பாற்றும்.

    Anyway வாழ்த்துக்கள். நீவிர் இவ்வாறு கேட்ட பின்னரும் சொல்லாது இருக்க முடியாது. நானும் சோமியும் செயற்கைக் கோள் வழியுரையாடுகிறோம். போதுமா..?
    (-ரென்சன் படுத்துறாங்கப்பா - )

  5. By Anonymous on April 10, 2007 at 3:03 AM

    நல்ல தமிழில் கஸ்ரப்பட்டு உரையாடுகிறீர்கள் ஆனாலும் வாய் தவறி வந்து விடுகிறது.. wait wait wait.. ஓரே காமெடியாகீதபா

  6. By வசந்தன்(Vasanthan) on April 10, 2007 at 3:19 AM

    தமிழ்பித்தன்,
    நல்ல முயற்சியும் முன்னேற்றமும்.
    இந்தத் தொழிநுட்பம் தனிப்பட்டவர்கள் கையிலிருந்து பொதுவுக்கு வருவது நல்லதுதான்.
    நீர் நுட்பத்தைக் கேட்டும் அதைச்சொல்லாமல் ஒளித்த சயந்தனின் செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
    மற்றவர்கள் தனக்குப் போட்டியாக வந்து தனது வியாபாரம் படுத்துவிடும் என்று அவர் பயப்படுகிறார் போலுள்ளது. நிச்சயம் அவருக்கு வைக்க வேண்டும் ஆப்பு.
    அதைத் தொடக்கி வைத்தவகையில் நீர் பாராட்டுக்குரியவர். தொடர்ந்தும் உம்முடைய ஆராய்ச்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்து.
    ___________________________
    எனது அனுபவத்தின்படி அடிக்கடி தண்ணி குடித்துக் கதைத்தால் விக்கலைத் தவிர்க்கலாம்.

  7. By தமிழ்பித்தன் on April 10, 2007 at 3:50 AM

    வசந்தன் சொல்வது போல கட்டாயம் கீரைக் கடைக்கு எதிர் கடை வேண்டும் இல்லாட்டி கீரைக்கடைக்காரனையும் பிடிக்க முடியாது
    ஒருவரும் தெளிவு பற்றி குறிப்பிடவில்லை
    கொசுறு செய்தி:சென்ற முறை சென்ற insat 4e யில் இவர்கள் கதைக்க வென்று சிறப்பாக வடிவமைத்து அனுப்பப் பட்டதாம்

  8. By தமிழ்பித்தன் on April 10, 2007 at 3:51 AM

    செயற்கை்கோள் அனுப்பப்பட்டதாம்

  9. By கானா பிரபா on April 10, 2007 at 5:02 AM

    ;-))) உரையாடலில நீங்கள் ரண்டு பேரும் விக்கல் வருகுதோ எண்டு ஆளை ஆள் கேட்டுக்கொண்டிராமை அடுத்தமுறை மைக்கிற்கு கொஞ்சம் தண்ணி பருக்கினால் நல்லது.

    தமிழ்ப்பித்தன் விடாதையும், நாங்கள் இருக்கிறம், ஒரு கை பார்க்காமல் விடக்கூடாது உவையளை.

    ஒண்டுக்கும் யோசியாதையும், முயற்சி திருவலை மன்னிக்கவும் திருவினையாக்கும்.

  10. By வி. ஜெ. சந்திரன் on April 10, 2007 at 5:28 AM

    கீரை கடைக்கு எதிர் கடை கட்டாயம் வேணும். என்னடா ஆரும் போட்டிக்கு இல்லையே எண்டு கவலைபட்டன். நீங்க வந்திட்டியள். நல்ல விசயம்........

  11. By Anonymous on April 10, 2007 at 5:30 AM

    //நிச்சயம் அவருக்கு வைக்க வேண்டும் ஆப்பு.//

    அப்பிடிப் போடு மாப்பு

  12. By Anonymous on April 10, 2007 at 7:05 AM

    //அப்போது சயந்தனிடம் உறுதியளித்தேன் நீங்கள் ஒரு வார காலத்துக்குள் அதுபற்றிய பதிவை வாசிக்க நேரிடும் //

    ஆகா தமிழ்செல்வன் மாதியே பேசுறீங்களே..

  13. By தமிழ்பித்தன் on April 10, 2007 at 10:28 AM

    என்ன வென்றால் கான பிரபா நாம் கதைக்கும் போது ஏதோ விக்கி விக்கி சத்தம் வந்தது எமக்கு வெறுத்தே போய்விட்டது சயந்தனிடம் தோற்றுப் போய் விடுவனோ என்று ஆனால் அதுவே பதிவு செய்த பின்பு பொட்டுப் பார்த்த போது அதிலே எந்த விதமான விக்கலும் இருக்கவில்லை //////நான் யாருக்கும் பொட்டியி்ல்லை போட்டியென்றால் விடவும் மாட்டேன்///
    நானும் அவர் ரசிகன் தானப்பா(ரஜனி)

  14. By Anonymous on April 12, 2007 at 1:21 PM

    //கொசுறு செய்தி:சென்ற முறை சென்ற insat 4e யில் இவர்கள் கதைக்க வென்று சிறப்பாக வடிவமைத்து அனுப்பப் பட்டதாம்//

    விடுதலைப்புலிகள், அமெரிக்காவிலிருந்து இயங்கும் செய்மதி தொலைத் தொடர்பு நிறுவனமான, இண்டெல்சாட் நிறுவனத்தின், செய்கோளை, அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுக்க தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.