புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Written by தமிழ்பித்தன் on 9:43 PM




தமிழர் துயர்தீர்த்து
தரணி புகழ் சேர்த்து
தரணியதையாளும்
தமிழர் திருநாளே

சிங்களம் அது கொன்று
செங்களம் அது வேன்று
மங்களம் அது பாடி
எங்களம் அது மகிழ

தலைவன் வழி நின்று
தமிழர் அணி சேர்ந்து
தமிழீழம் மலர்ந்திட
வருக புத்தாண்டே!

பசிப் பிணியது போக்கி
புதுமைகள் படைத்து
பழம் தமிழர் புகழ் சேர்த்து
பாரதம் மீதினிலே..

பல அணிகள் மறைந்து
ஓரணியாய் பலம்மிக்க
தமி்ழ்நாடாய் மலர வருக
புத்தாண்டே!

சிங்கை முதல் கொண்டு
கனடா வரை கண்ட
தமிழன் குலம் ஓங்கி
வையகம் அதிலே வாழ்வோங்க!

புத்தாண்டே நீ வருகவே
வருக வருகவே
வளம் பல தருகவே

அநியாயம் ஒழிந்து
அமைதியுள்ள உலகமாய்
புதுப்பொழிவுடன்
புலர்க புத்தாண்டே!





அனைவருக்கும் தமிழ்பித்தனின் தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 6 கருத்துக்கள்: Responses to “ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ”

  2. By மாசிலா on April 13, 2007 at 11:32 PM

    உங்களுக்கும் எனதினிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ்பித்தன்.
    நன்றி.

  3. By கானா பிரபா on April 14, 2007 at 1:40 AM

    வாழ்க வளமுடன், இன்று போல் என்றும்

  4. By தமிழ்பித்தன் on April 14, 2007 at 3:44 AM

    வாழ்த்துக்கள் மாசிலா மற்றும் கானாபிரபா

  5. By nagoreismail on April 14, 2007 at 4:23 AM

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

  6. By ஆதிபகவன் on April 14, 2007 at 4:56 AM

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  7. By தமிழ்பித்தன் on April 14, 2007 at 4:59 AM

    வாழ்த்துக்கள் நாகூர் இஸ்மாயில் மற்றும் ஆதிபகவன்