தமிழ்மணத்தின் ஓர வஞ்சனை
Written by தமிழ்பித்தன் on 10:22 PMதமிழ்மணம் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. அதாவது வழமையாக நாம் ஏதும் பதிவிட்டால் பதிவின் கீழே பதிவின் ஓரிரு வரிகளை காட்டும். அதற்காக, நான் உட்பட பலர் அந்த முதல் இரு வரிகளை கவர்ச்சியாக எழுதுவது வழக்கம். அப்படி கவர்சியாக எழுதி பதிவிட்ட கடைசிப்பதிவின் அந்த இரு வரிகளை தமிழ்மணம் திரட்ட வில்லை. ஏதோ கடமைக்கு தலைப்பை மட்டும் திரட்டியது. அதே நேரம் வெளியான மற்றவர்களின் பதிவின் முதல் வரிகளை திரட்டியது. இதற்கு காரணம் என்ன? ஓரவஞ்சகமா?
இவற்றையெல்லாம் கனகச்சிதமாக புகைப்படம் பிடித்தார். எமது தமிழ்மணத்துக்கான செய்தியாளர் மேதாவி அவர்கள்
அவற்றை கீழே காணலாம்
படம் 1
படம்2
படம்3
தமிழ்பித்தன் மீது ஏதும் கோபமா? அல்லது அதற்காக ஏதும் சிறப்பான முறையில் பதிய வேண்டுமா? பதில் தாருங்கள்
இதில் சம்மந்தப்பட்டிருப்பது பார்பனியமா? (((ஆமாம் பார்ப்பனியம் என்றால் என்னையா அடிக்கடி தமிழ்நாட்டுபதிவுகள் சிலதில் காணக்கிடைக்குது)))
ஈழப்பதிவாளன் என்ற பாகுபாடா?
வேற ...என்னத்தை வைத்து இதுக்க கொல்லுப்படுகிறவர்கள் ஆஆ....
இந்து என்கின்றதாலா? ( ஹி.. ஹி.. நானும் தமிழ்மணத்தின் மீது ஒரு குற்றைச்சாட்டை சுமத்திட்டோமல்ல.......ஆ)
இனி விசயத்துக்கு வருவோம் அப்படி ஏன் திரட்டுகிறது தமிழ்மணம் நாம் பதியும் போது மேலே புகைப்படம் போடுவதாலா முந்தி அப்படி நடப்பதில்லை நேற்று மட்டும்தான் நடந்தது தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்
6 கருத்துக்கள்: Responses to “ தமிழ்மணத்தின் ஓர வஞ்சனை ”
By கானா பிரபா on May 22, 2007 at 4:56 AM
ஆரம்பிச்சிட்டான்யா
By தமிழ்பித்தன் on May 22, 2007 at 5:01 AM
ஏனையா உண்மையைதானையா சொன்னேன் ஏன் இந்தப்பதிவைக்கூட திரட்டவில்லை
By Jazeela on May 22, 2007 at 5:34 AM
இதெல்லாம் ஒரு புகாரா? சின்னப்புள்ளதனமால தெரியுது.
//இனி விசயத்துக்கு வருவோம் அப்படி ஏன் திரட்டுகிறது தமிழ்மணம் நாம் பதியும் போது மேலே புகைப்படம் போடுவதாலா முந்தி அப்படி நடப்பதில்லை நேற்று மட்டும்தான் நடந்தது தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்// இதுதான் காரணமாக இருக்க முடியுமே தவிர எந்த ஓரவஞ்சனையாகவும் இருக்க முடியாது. யாருடைய 2 வரி வரவேண்டும் வர வேண்டாம் என்றெல்லாம் பார்த்து பார்த்து திரட்ட அந்த பக்கம் யாரும் ஆள் போடல. மென்பொருள் தானாக திரட்டுகிறது அவ்வளவுதான்.
இனி ஒரு பதிவு திரட்ட US$10 கட்டணம் போடப் போறாங்க- அப்ப புகாரை கடினமா வச்சிக்கலாம் சரியா ;-))
By தமிழ்பித்தன் on May 22, 2007 at 6:23 AM
அதுதானையா ஏன் அப்படி
By இலவசக்கொத்தனார் on May 22, 2007 at 6:34 AM
உங்க பிளாக்கர் ஸெட்டிங்க்ஸ் பாருங்க. Allow Blog Feed என்பது Full என இருக்க வேண்டும்.
இதுக்கெல்லாம் தமிழ்மணத்தைத் திட்டறது ஓவரா இல்லை?
By Anonymous on May 22, 2007 at 9:08 PM
உங்க feed full இல்லீங்க தல