அம்மாவுக்கு ஓர் ஒலிப்பதிவு
Written by தமிழ்பித்தன் on 6:09 AMஉன்விழியில் எனை வைத்துக்காத்தவளே,
நீ கலங்கிய போதும் என்னை கலங்காமல் காத்தவளே,
காலம் எமை பிரித்து வைத்து விட்டது.
பள்ளிப்பருவத்திலே பாடசாலை விட்டு,
வீடு திரும்பும் போது வீட்டுமுன் சுடுமண் பட்டு,
கதறும் போது ஓடிவந்து அணைத்தவளே,
அப்போது நான் சிந்தித்தது இல்லை உனக்கும் சுடுமென்று!
நாட்டிலே பொருளாதாரத்தடை உணவுக்கோ பெரும் பஞ்சம்,
வீட்டிலே பெரும் கஸ்டம்-அப்போது,
நீ உண்டாயோ தெரியாது எமக்கு வயிரார ஊட்டி விட்டாய்,
அப்போது எனக்குப் புரிய வில்லை உனக்கும் பசிக்கும் என்று!
உன்னை வெல்ல தெய்வம் இல்லை-அந்த
தெய்வத்தின் வார்த்தையை மீறி இங்கு வந்து,
வாழ்கையை தொலைத்து விட்டேன்.
வசந்தத்தை இழந்து விட்டேன்.
"பித்தம் கொண்டு சித்தம் மறந்த இந்த பித்தன்
எப்பொதுதான் உன் கடன் தீர்ப்பானோ?"
ஒலிவடிவில் கேட்க கீழே கேளுங்கள்
0 கருத்துக்கள்: Responses to “ அம்மாவுக்கு ஓர் ஒலிப்பதிவு ”