என் வாழ்வியலின் சாட்சியங்கள்
Written by தமிழ்பித்தன் on 5:27 PMவசந்த காலத்தில் நிற்பது அறியாமல் கோடைக்கு
ஏங்கும் குயில்கள் போல,
கஞ்சி தரும் காசாப்பு கடைக்காரனே கழுத்தறுக்க போகிறான்
என அறியாத ஓர் ஆட்டைப்போல,
தாய்மையின் பாசமும் - பணத்தின்
பிண வாடையும் புரியாத பாவியாக,
தாயின் அந்த தீர்க்கதர்சனமான வார்த்தைகளை
புரிந்து கொள்வதற்க்குள் புழுதிக்குள் புழுவாகி,
தாயின் பஞ்சனை மடியறியா,
பற்றைக் காட்டினுள் கண்ட இலவம்
பஞ்சுக்காய் ஏங்கிய பாவியாய்,
இப்போதுதான் வலிக்கிறது பற்றையின் முற்கள்
கால நதியிலே கலந்துவிட்ட வாழ்க்கையை
கரையேற்றத்துடிக்கும் அவலத்தின் நினைவுகள்
கரையேற விடாமல் தடுக்கம் -சில
பாசபந்த பிணைப்பின் வலிமைகள்
சிறகிழந்த கிளியை சீண்டுகிறது
ஓர் கழுகு
கிளிக்கும் சிறகுமுளைத்தால்
அதுவும் தப்பிக்கதான் நினைக்குமே
தாமரையில் உள்ளவரை அதன்
அருமை அறியாத பனித்துளி
சேற்றில் விழுந்த பின்பு
திரும்ப முடியாது முழிக்கிறது
இவ்வாரத்தை தாய்மை வாரமாக தமிழ்பித்தன் கொண்டாடுகிறது வருகின்ற 13 ம் திகதி அன்னையர் தினம்.
""அனைத்து அன்னையர்களுக்கும் உங்கள் செல்லப்பிள்ளை இந்த தமிழ்பித்தனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்"'
4 கருத்துக்கள்: Responses to “ என் வாழ்வியலின் சாட்சியங்கள் ”
By Anonymous on May 6, 2007 at 8:31 PM
தமிழ்ப்பித்தா
உன் பாசத்துக்கு அளவேயில்லையா?
By தமிழ்பித்தன் on May 6, 2007 at 8:54 PM
பாசத்தின் மீது கொண்ட நேசத்தால் தானே மோசம் போனோம் பாசங்கள் பல இது தனியே தாய்ப்பாசம்
By Anonymous on May 6, 2007 at 9:09 PM
ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
By தமிழ்பித்தன் on May 6, 2007 at 9:25 PM
அனைத்து பாசத்தையும் விட தாய்ப்பாசத்துக்கு ஒரு சக்தியிருக்கு ரஜனிகாந்த் அதை தயவு செய்து இழிவு செய்யாதீர்கள்