ஹி..ஹி.. சிரிங்க(6)

Written by தமிழ்பித்தன் on 6:55 AM

நம்மடை ஆள் ஒருத்தரு விமானத்தில் பயணம் செய்திருக்காரு அவருடன் அமெரிக்கன் ரஷயன் ஜப்பான்காரன் போன்றோர் பயணம் செய்திருக்கிறார்கள் எல்லோரும் கூடி கதைக்க தொடங்கிய இடத்தில் அவரவர் தத்தம் நாடுகளை பற்றி புழுகத்தொடங்கி விடுகிறார்கள்

அமெரிக்கன்;-எங்கள் நாட்டு விமானம் நிலவைதொட்டுக்கொண்டு தொட்டுக்கொண்டுதான் போகும்

மற்றவர்கள்;- உண்மையாகவா?

அமெரிக்கன்;-சீ..சீ...கொஞ்சம் கீழாலதான் போகும்

ரஷயன்;- எங்கள் நாட்டு ராக்கட்டெல்லாம் நட்சத்திரத்தையெல்லாம் தொடும்

மற்றவர்கள்;-உண்மையாகவா?

ரஷயன்;- சீ...சீ.. சற்று கீழாலதான்

ஜப்பான்;-எங்கள் நாட்டு கட்டடமெல்லாம் வானத்தை முட்டும்

மற்றவர்கள்;- உண்மையாகவா??

ஜப்பான்;-சீ..சீ.. சற்றுக் கீழதான் நிக்கும்

நம்மடையாளுக்கு ஒன்றும் புழுகுவதற்க்கு கிடைக்கவில்லை கனநேரம் யோசித்த பின்பு திடீரெனஎங்கள் ஊர் சனமெல்லாம் மூக்காலதான் சாப்பிடுறவை

மற்றவர்கள்;- உண்மையாகவா?

நம்மடையாள்;- சீ..சீ.. சற்று கீழால உள்ளதால சாப்பிடுறவை

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி.. சிரிங்க(6) ”

  2. By selventhiran on June 4, 2007 at 8:28 AM

    பித்தா பிறை சூடி பெருமானே,
    கடிக்காதே அருளாளா
    ஏத்தான் மறவாதே
    படிக்கின்றேன் நின் பிளாக்கை

  3. By தமிழ்பித்தன் on June 5, 2007 at 4:14 AM

    அடுத்த திருநாவுககரசர் ரெடிபோல கிடக்கு

  4. By நாமக்கல் சிபி on June 5, 2007 at 5:08 AM

    //நம்மடையாளுக்கு ஒன்றும் புழுகுவதற்க்கு கிடைக்கவில்லை கனநேரம் யோசித்த பின்பு திடீரெனஎங்கள் ஊர் சனமெல்லாம் மூக்காலதான் சாப்பிடுறவை

    மற்றவர்கள்;- உண்மையாகவா?

    நம்மடையாள்;- சீ..சீ.. சற்று கீழால உள்ளதால சாப்பிடுறவை
    //


    :)


    //பித்தா பிறை சூடி பெருமானே,
    கடிக்காதே அருளாளா
    ஏத்தான் மறவாதே
    படிக்கின்றேன் நின் பிளாக்கை
    //

    :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))