மாலன் சொன்னதை புரிந்து கொள்ளாத பெயரிலியும் ஈழத் தமிழ் பதிவர்களும்

Written by தமிழ்பித்தன் on 6:52 AM

மாலன் அவர்கள் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல ஏன் சிறிலங்காவின் பாஸ்போட்டை பயன்னடுத்துகிறார்கள் என்று பதிவர் பட்டறையில் கேள்வி எழுப்பி இன்று வலைப்பதிவு உலகில் சுப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்திட்டார். ஆனால் அவர் ஏன் அப்படி கேட்டார் என்பதை பற்றி அலசாமல் எல்லோரும் தம்பாட்டுக்கு அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஈழத்தமிழர் சிறிலங்காவின் பாஸ்போட்டை பாவித்தே வேளிநாடு அல்லது இந்தியாவுக்கு தற்காலத்தில் செல்லமுடியும் ஆகவே அவர்களை பார்த்து ஏன் சிறிலங்காவின் பாஸ்போட்டை பாவிக்கிறீர்கள் என்று கேட்டதை ஏன் வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.அவர் சொன்னதற்கான காரணங்களாக இருக்கக் கூடியவையை

1)அவர்கள் வெளிநாடு சென்று குடியேறி விடுவதால் அவர்களின் அடுத்து தலைமுறை தமிழை மறந்து விடுவார்கள் ஆகவே தமிழ் அழிவுறும் என்று கவலையுறலாம்

2)எல்லா தமிழர்களும் வெளியேறி விட்டால் விடுதலை புலிகள் பேராட்டத்துக்கு ஆள்சேர்க்க முடியாதே என வருத்துமுறலாம்

3)வெளிநாட்டிலிருந்து சென்ற பதிவர் யாராவது அவருக்கு பரிசில் பொருட்கள் இன்றி சந்திக்கப் போயிருக்கலாம்.

4)அவர்களின் உறவினர்கள் இந்தியாவிலேயே தங்குவதால் அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தால் பணவீக்கம் அதிகரிக்குமோ என அஞ்சலாம்.

5)ஈழத்தமிழர்கள் புலம்பெயரவதனால் பத்திரிகை தொழில் பாதிக்குமே என அஞ்சலாம்

6)வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சரவணாஸ் ஸ்ரேரில் அடிவாங்கியதால் புலம்பெயராவிடின் இந்நிலமை ஏற்பட்டிருக்காது, என நினைத்திருக்கலாம்.

மொத்தத்தில் அவருக்கு ஈழத்தமிழர் மீது அலாதிப்பிரியம்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ மாலன் சொன்னதை புரிந்து கொள்ளாத பெயரிலியும் ஈழத் தமிழ் பதிவர்களும் ”

  2. By Anonymous on August 11, 2007 at 12:58 PM

    காந்தி லண்டனுக்கு சென்ற பாஸ்போர்ட்டை பார்க்க இங்கே அழுத்தவும்

  3. By Anonymous on August 11, 2007 at 6:10 PM

    மாமூ பின்னீட்டாய் நீயி
    ;-)))

  4. By மிதக்கும்வெளி on August 12, 2007 at 1:55 AM

    இது!