;;;எச்சரிக்கை;;;((தமிழ்மணத்தில் வைரஸ் தாக்கம்))

Written by தமிழ்பித்தன் on 7:29 AM

சில காலமாகவே இந்த தொற்று இருப்பதாக அறியப்பட்டாலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது.........ஆரம்பத்தில் நன்றாக தான் இயங்கியது தமிழ்மணம் (2005க்கு முன் என்று வரையறுக்கலாம்) பதிவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது எல்லோரும் ஒன்றாக செயற்பட்டார்கள். ஆனால் பிற்பட்ட காலத்தில் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க குழுக்கலாக பிரியும் தன்மை அதிகரித்தது.



அப்படி அண்மையில் தமிழில் பற்றுக்கொண்ட ஆச்சி கும்மி பதிவுகளுக்கு அதிக பின்னூட்டம் வருவதாகவும் தனக்கு பின்னூட்டங்கள் வருவதில்லை எனவும் ஆதங்கப்பட்டு ஓர் பதிவு போட்டார்(ஆச்சி சீரியஸ்சான பதிவராம் நான்கு மாதத்துக்குள் நானூறு பதிவு பொட்டு சாதனை படைத்தவராம்). அதற்க்கு ஓசையால் ஓலம் எழுப்பினார் ஒருவர்.

அதற்க்கு தமிழில் பற்றுக்கொண்ட ஆச்சிதான் கராத்தேயில் எடுத்த பதக்கத்துடன் எல்லாம் படம் போட்டார். எல்லோரும் எதிர்பார்த்தார்கள் மற்றவர் வீரப்பனுடனோ அல்லது பில்லாடனுடனோ எடுத்த புகைப்படத்தினை பிரசுரிப்பார். என ஆனால் அது நடக்கவில்லை (பேந்து போட வாடாவில் அவர் உள்ள போய் வாடி வதங்கி விடுவேன் என்ற பயம் இருக்கலாம்) பின் கும்மி பதிவராக அவரை தெரிந்து ஒரு பதிவு வந்தது. அவர் சில காலங்களுக்கு முன் உணர்சிகளால் பாதிக்கபட்டவர் (பின் உணர்ச்சி அடங்கியது வேறகதை) வேறுசிலர் ஆச்சிக்கு ஆதரவு குரல் எழுப்பினர் இது அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இது போல பல நிகழ்வுகள் நடந்தன. அனைத்தும் ரசிக்க கூடியவையாகவே இருந்தவை என்பதில் மறுப்பில்லை அவையே எல்லைகள் மீறும் போது சில நல்ல பதிவர்களை நாம் இழக்க கூட நேரிடலாம்.

"கும்மியடிப்போம் ஆனால் குட்டையை குழப்பாமல்"

கும்மிப்பதிவர் சங்கம் இதை கும்மி பதிவாக ஏற்றுக் கொள்ளுமா???????


வேண்டுகோள்:- இந்த பதிவை பார்த்து விட்டு ஆயுதங்களுடனே அல்லது காரத்தே சிலம்பம் குங்பூ போன்ற கலை பயின்ற படியோ தயவு செய்து பதிவு போடாதீர்கள் என்னால் பதிலுக்கு பதிவு போட படங்கள் இல்லை ஒட்டப் போட்டியில் ஓடுவது போலதான் படப்பதிவு போட முடியும்

""நாமலும் மொக்கை போடுவோமல்ல"""

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 13 கருத்துக்கள்: Responses to “ ;;;எச்சரிக்கை;;;((தமிழ்மணத்தில் வைரஸ் தாக்கம்)) ”

  2. By ILA(a)இளா on August 2, 2007 8:08 AM

    //ஒட்டப் போட்டியில் ஓடுவது போலதான் படப்பதிவு போட முடியும்//
    ahhahhha, இதுவா கும்மி? நல்ல நகைச்சுவைங்க.

  3. By தமிழ்பித்தன் on August 2, 2007 8:16 AM

    நன்றி இளா என்னோட கும்மியை ரசித்தமைக்கு

  4. By ILA(a)இளா on August 2, 2007 8:24 AM

    ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்தப் பதிவை போட்டு மொக்கை போட்டிக்கு வெச்சு இருந்தீங்கன்னா, மீட்டர் சும்மா எகிறு இருக்குமே..

  5. By தமிழ்பித்தன் on August 2, 2007 8:35 AM

    எப்பவே எழுதினதுதான் ஆனால் நேரம் கிடைக்காமல் போய்விட்டது (கனடாவில் தற்போது லீவு என்பதனால் நூல் நிலையத்தில் கணணி சேவையை பெறுவது கடினமாக இருக்கிறது)

  6. By Anonymous on August 2, 2007 11:51 AM

    //பின் உணர்ச்சி அடங்கியது வேறகதை//

    அப்பு உணர்ச்சி அடங்கவில்லை. அடக்கப்பட்டார். அந்தக் கதை ஒரு காவியமப்பு.. விரிவா எழுதவோ

  7. By OSAI Chella on August 2, 2007 7:12 PM

    நண்பரே, நீங்களும் சூப்பரா கும் கும் நு கும்முவீங்க போல இருக்கே! முதலில் இந்த ஆச்சி மேட்டர் புரியல... அப்புறம் கராத்தேன்னதும் தான் மண்டையில ஏறுச்சு!

  8. By PRINCENRSAMA on August 2, 2007 11:47 PM

    கனடாவில் என்ன லீவு? anything special?

  9. By PRINCENRSAMA on August 2, 2007 11:54 PM

    கும்மிப் பதிவுன்னு போட்டங்காணும் தப்பிச்சீர்! தமிழச்சி தொடர்ந்து பெரியார் பதிவா போட்டுட்டு வர்றது பொறுக்கலையா என்ன?
    இப்படி காய்கிறீர்.

  10. By பொன்ஸ்~~Poorna on August 3, 2007 6:49 AM

    //நாமலும் மொக்கை போடுவோமல்ல//

    என்னது! அப்ப இதுவரை நீங்க போட்டதெல்லாம் மொக்கை இல்லைன்னு சொல்லுறீங்களா? !

  11. By தமிழ்பித்தன் on August 4, 2007 9:45 AM

    அப்ப செல்லா அண்ணை கராத்தேன்னா ஒரு பயம் இருக்குன்னு சொல்லுங்க

  12. By தமிழ்பித்தன் on August 4, 2007 9:46 AM

    அனாமி அண்ணா நீங்கள் யாரண்டு புரியுது எழுதுங்கோ நான் தான் முதல் பின்னூட்டம் இடுவன்

  13. By தமிழ்பித்தன் on August 4, 2007 9:49 AM

    PRINCENRSAMA

    அது வேற ஒன்றும் இல்லை பாடசாலைகள் கோடை விடுமுறை கம்பனிகளும் கோடைகால ஒருவார விடுமுறை அதனால் தான்

  14. By தமிழ்பித்தன் on August 4, 2007 9:51 AM

    ///என்னது! அப்ப இதுவரை நீங்க போட்டதெல்லாம் மொக்கை இல்லைன்னு சொல்லுறீங்களா? !///

    வேணாம் வேணாம் அழுதுடுவ....