எங்கே எனது அறுஞாகொடி? (நினைவில் மலர்பவை 3)

Written by தமிழ்பித்தன் on 7:14 AM

அறுஞா கொடி என்றால் முதல் விளக்கம் கொடுக்க வேணும் பாருங்கோ பேந்து அது தெரியாமல் இது வாசிச்சு பிரியோசனம் இல்லை. அறுஞா கொடி என்றால் சிறு வயது ஆண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டப்படுகின்ற ஓரு கறுத்த கயிரோ அல்லது பவுனில் செய்ததாகவோ இருக்கலாம். சுந்தரா ரவல்ஸ் படத்தில் முரளி கடனை அடைக்க இதைத்தான் அறுத்து கொடுப்பார்.

நான் அறிகிற வயசில் நான் அணிந்து கொண்டது பவுனால்தான் இருந்தது. அந்த காலத்தில் அதை வெளியே தெரிய காட்ட வேணும் என்று கால்சட்டையை இடுப்புக்கு கீழே இறக்கிவிடுவதுண்டு. (இங்க கறுவல்களோடே சேர்ந்து நம்மடையளும் ஜீன்சை முழங்காலுக்கு கீழ விட்டு நடக்கமாட்டாமல் திரியுதுகள் அதுகள் என்னத்தை காட்ட ஆசைபடுதுகளோ?)

இப்படியான காலத்தில் தான் விடுதலைப்புலிகளும் இந்தியராணுவமும் மேதியதன் விளைவு அதுவரை இந்தியா ஈழப்போராட்டத்துக்கு வழங்கி வந்த உதவியை நிறுத்திக் கொண்டது. புலிகள் சொந்த காலில் நிற்க வேண்டிய நிலமை முதல் முதலில் நிலமை என்பதால் அதை உடனடியாக சமாளிப்பதற்காக மக்களிடமிருந்து நேரடியாக பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.பின் குழுக்கல் முறையில் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள்.

அதே நேரம் மக்கள் பெரும் பொருளாதாரப் பிரச்சினையை எதிர் நோக்கியிருந்த நேரம் மக்கள் பணம் தற்போது இல்லையே என்று எதிர்ப்பை தெரிவிக்க முற்பட்ட வேளையில் அதற்க்கு மாற்றாக 2 பவுன் தரலாம் என்று அறிவித்திருந்தது. இதை அறிந்த அப்பா வீடு வந்து இதை பற்றி அம்மாவுடன் ஆலோசனை கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்தார். நானும் அப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் வழமைபோல் காற்சட்டை இடுப்புக்கு கீழே தான் இருந்தது. எனது அறுஞா கொடி அப்பாவின் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
"வாடா செல்லம் குளிக்கப் போவம்" என்று கூறி (அப்பவும் யோசித்தனான் இந்தாள் ஒரு நாளும் குளிக்க வார்ப்பதுகிடையாதே என்று அப்ப அந்த சிறு மூளைக்கு எட்டவில்லை) குளிக்க வார்த்துக் விட்டு கத்தரிக்கோல் அறுஞா கொடியை கத்தரித்து எடுத்தார். ஏன் அறுக்கிறாய் என்று கேட்டதற்க்கு பிள்ளைக்கு இதை விட பெரிசா போடுவம் என்று சொல்லி விட்டு சென்றார். இதை நான் அம்மாவிடம் முறையிட அவா இயக்கம் கேட்கிறாங்கள் கொடுப்பம், திருப்ப தருவாங்கலாம்.

"என் வாழ்வின் முதல் இழப்பு அதுதான்"

அப்ப விட்டுப்போனது இன்று வரை அது இல்லை அது எங்கே??

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 4 கருத்துக்கள்: Responses to “ எங்கே எனது அறுஞாகொடி? (நினைவில் மலர்பவை 3) ”

  2. By கொழுவி on August 23, 2007 at 11:11 AM

    //இங்க கறுவல்களோடே சேர்ந்து//

    பித்தன் பால் போல நல்ல வெள்ளையோ? :)

  3. By மாசிலா on August 23, 2007 at 12:44 PM

    வணக்கம் தோழர் யாழ்கோபி தமிழ்பித்தன்.

    அறுஞாகொடியா அல்லது அரை ஞான் கொடியா? புதுவையில் நாங்கள் அறுனா கயிறு என்று சொல்லியே வழக்கம்.

    ஞான் = உடல்
    அரை உடலான இடுப்பில் கட்டுவதால் அரைஞான் கயிறுதான் இதன் உண்மை பெயரோ? இருக்கலாம்.

    நல்ல சேவைக்கு உபயோகப்பட்ட உங்களது கொடி இப்போது எங்கு இருந்தால் என்ன? விட்டு தள்ளுங்கள்.

    பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யாழ்கோபி தமிழ்பித்தன்.

  4. By தமிழ்பித்தன் on August 24, 2007 at 6:43 AM

    கொழுவி அண்ணா
    உடல் வெள்ளையோ கறுப்போ என்பதை விட மனம் பசும் பால் வெள்ளை ஐயா வெள்ளை

  5. By தமிழ்பித்தன் on August 24, 2007 at 6:47 AM

    அரை+ஞான் கொடி மருவி
    அரைஞா வாகவும்
    அதே பேச்சு வழக்கில் அறுஞா வாகவும் இருப்பதாக படித்திருக்கிறேன் நன்றி மாசிலா