ஹி..ஹி..சிரிங்க

Written by தமிழ்பித்தன் on 7:17 AM

ஒருவர் முடி திருத்தும் கடை நடத்திவந்தார் அவரிடம் வேலை பழக ஒரு சிறுவனும் இருந்தான் அவன் அவருக்கு எடுபிடி என்றே கூறலாம்.(குருவல்லவா வேலை பழகுவதானாலே இப்படித்தானே)

ஒரு நாள் மதியம் ஒரு மணியளவில் ஒரு இளைஞன் வந்து "அண்ணை முடி வெட்ட வேணும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்" என்றான். அதற்க்கு அவர் "தம்பி நான்கு பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வெட்டி முடியவேணும் எப்படியும் ஒன்ரரை மணிநேரமாவது எடுக்கும்" என்றார்.

அதற்கு அவன் "அப்ப நான் அண்ணை உதுல போய் ஒரு இளநீ குடிச்சிட்டு வாறன்" என்று கூறி சென்றான் ஆனால் அவன் வரவில்லை மறுநாளும் இப்படியே அவன் வர மூவர் இருந்தனால் தான் இளநீ குடித்து விட்டு வருகிறேன் என்று கூறினான்

இப்படியாக நான்கைந்து நாட்கள் நடந்தன ஒரு நாள் பெறுமையிழந்த அவர் இவன் செல்ல விட்டு தன் எடுபிடியை கூப்பிட்டு

"அவன் உண்மையில் இளநீ குடிக்கத்தான் போகிறான? அல்லது வேறே எங்காவது போகிறானா? என்று பார்த்துவா"
என்று அனுப்பினார் அவனை பின்தொடர்ந்து சென்றவன் அறக்கப்பறக்க ஓடியந்து

""அண்ணை.. அண்ணை ...அவன்""

"என்னடா உளறாமல் சொல்லடா''

""அவன் உ..உங்..உங்கட வீட்டை அண்ணை பொறான்"'

" ஆ..ஆ....ஆ..ஆ.....என்ர வீட்டை தென்னையே இல்லையேடா....?"

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
 1. 4 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி..சிரிங்க ”

 2. By விஜயன் on August 8, 2007 at 8:22 PM

  Nice one

 3. By Anonymous on August 10, 2007 at 4:11 AM

  onnum puriyalae :(

 4. By தமிழ்பித்தன் on August 10, 2007 at 8:29 AM

  என்னங்க ஒன்றும் புரியலையா? என்னங்க சின்னப்புள்ளையாட்ம் இருக்கிறீரே அனானிக்கு கள்ளம் கபடம் அற்ற மனசு

 5. By செ.பொன்னுதுரை on August 10, 2007 at 9:50 AM

  ஹி..ஹி..சிரhttp:
  //ponnuthuraiselvaraj.blogspot.com
  ிங்க //