ஐயோ... நம்ம பப்பியை சுட்டுட்டாங்கள்

Written by தமிழ்பித்தன் on 8:05 AM


அப்பாவும் அண்ணணும் அருகில் இருந்த தோட்டத்துக்கு மிசின் பூட்ட சென்றிருந்தனர். நான் ரீ குடித்து கொண்டிருந்தனான் சிறிது நேரத்தில் ஆறு வெடியோசைகள் தொடர்ந்து கேட்கின்றன.தொடர்ந்து ஐயோ பப்பியை சுட்டுட்டாங்கள், என்று அண்ணணுடைய குரல் கேட்கிறது. நானும் அம்மாவும் வீட்டுக்கு வெளியே ஓடியந்து பார்கிறோம். எமது செல்ல நாய்குட்டி (6 மாதம் தானிருக்கும்) பப்பி 6 குண்டுகளால் சல்லடை போடப்பட்டு சாகடிக்கப்பட்டு இறந்து கிடந்தது. எல்லோர் கண்ணிலும் நீர் கசிகிறது. இருவர் சாரத்துடன் இரு துவக்குடன் நாய்குட்டிக்கு கிட்டவந்து மச்சான் செத்துட்டுதுடா? . என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள் எவருக்கும் துணிவில்லை எதிர்த்து கேள்வி கேட்க.

அப்போது, அம்மம்மா ஏன்றா தம்பிகளா சுட்டியள் என்று கேட்கிறார் அப்போது அவர்கள் "மனிதருக்கே சாப்பிட சாப்பாடில்லை இதெல்லாம் எதற்க்கு நம்நாட்டில் என்று சொல்லி விட்டு" செல்கிறார் சிறிது நேரம் கழிந்து மீண்டும் சில வெடியோசைகள்........

ஆமாம் நான் பால் குடிக்கும் என்னருகில் ஓர் சிரங்கை பாலுக்காக ஒரு மணிநேரம் காவல் காக்குமே படுக்கும் வரைக்கும் என்னுடன் கொஞ்சி விளையாடுமே அது எங்கே..

"ஒர் உயிர் போகும் போது ஒராயிரம் கண்ணீர் பூக்கள் சிந்தப்பட்டால் ஒன்றில் அந்த உயிர் விலைமதிக்கதக்கது ((அரசியல் சினிமா வகை பிரபல்யங்களாக இருக்கலாம்)) அல்லது அந்த நாடு விலைமதிக்க தக்கது அதுவே சொர்க்கத்தின் சாட்சியம். அங்கே சித்தாந்தம், தத்துவ புரட்சி, மறுமலர்ச்சி எதுவுமே தேவையற்றது "

-- ஜோட்ச் பெனடிட்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 4 கருத்துக்கள்: Responses to “ ஐயோ... நம்ம பப்பியை சுட்டுட்டாங்கள் ”

  2. By நாமக்கல் சிபி on September 6, 2007 at 9:04 AM

    :(

  3. By ✨முருகு தமிழ் அறிவன்✨ on September 6, 2007 at 9:39 AM

    தமிழ்ப் பித்தன்,நான் இணையங்க்களில் நெடுங்காலம் உலவி வந்தாலும்,வலைத்திட்டுகளுக்கு மிகச் சமீபமாகவே வந்திருக்கிறேன்.
    உங்கள் பதிவுகள் பெரும்பாலும் ரசிக்க வைக்கின்றன;அல்லது நெகிழ வைக்கின்றன.
    பாராட்டுக்கள்...

  4. By தமிழ்பித்தன் on September 6, 2007 at 11:05 PM

    நன்றி அண்ணா சங்க பலகை உங்கள் ஊக்கம் இன்னும் எழுத தூண்டுகிறது

  5. By வடுவூர் குமார் on September 6, 2007 at 11:54 PM

    பார்த்தா,சுட தோனுகிற மாதிரியா இருக்கு,
    கொடுமை தான்.
    சுட்டவர்கள் நிச்சயம் மனம் பிழந்தவர்கள் தான்.அவர்கள் கையில் ஆயுதம் இருப்பது மேலும் வருத்ததை அளிக்கிறது.