போய் வருகின்றேன்! நன்றி!!!?

Written by தமிழ்பித்தன் on 5:37 AM

சில வேளைகளில் எனது பதிவுகள் எல்லை மீறி போயிருப்பதை நானும் அறிவேன். அதற்கான சில நியாயப்படுத்த தக்க காரணங்கள் இருப்பினும் அவற்றை எல்லாம் இங்கே சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. நான் என்னை நீயாயப்படுத்தி நல்லவன் என பெயர் எடுக்கவும் விரும்பவில்லை. சில விசமிகள் திட்டமிட்டே என் பின்னூட்டல் பெட்டியை அசிங்கம் செய்ததையும் அறிவேன். அவற்றுக்கா அவ்பின்னூட்டங்களை மட்டறுக்க முடியாமல் இருந்தமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்.அத்துடன் அந்த சர்ச்சைக்குரிய அந்த பதிவுகள் நீக்கவும் படுகின்றன.

இது வரை இந்த பித்தனின் பிதற்றலை பாசத்தோடு வாசித்து உரிமையோடு தோளில் தட்டி உற்சாக மூட்டிய உறவுகள், சிலதை தவறு என எதிர்த்து நின்று வழி நடத்திய நண்பர்கள். நான் வலைப்பதிவில் வந்து கொடுத்ததைக்காட்டிலும் பெற்றுச் செல்வதே அதிகம் ஆகவே என்றும் நான் உங்கள் கடனாளியே......

காலங்கள் மாறும் வரும் காட்சிகளும் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறி மீண்டும் உங்களிடம் வருவேன். உங்களை செல்லமாக கிள்ளி விளையாட அது வரை உங்கள் விளையாட்டுக்கள் அனைத்தையும் மூன்றாம் ஆளாக நின்று பார்த்து சிரிப்பேன் சில வேளை மனம் வெம்புவேன் இத்தருணத்தில் நான் இல்லையே என்று சிலவேளை வருந்துவேன் இன்னும் மாறவில்லையா என்று...

நான் வளத்த மாவும் பலாவும் என்நாவிற்கில்லை,
நான் வளர்த பசுவின்பால் என் ரீயிற்க்குள்ளில்லை,ஆனாலும்
மாடு தாகத்தால் கதறும் போது உள்ளுக்குள் சில விரிசல்கள்.
அந்த விரிசல் ரணமாகி உதிரமாகிவராதவை,
கண்ணீராகி காற்றோடு கலப்பவை
அந்த கண்ணீர்த்துளி பசுவின் தாகத்தை போக்குமா??

நான் வளத்த வளர்ந்த உறவுகள் முகம் சுழிக்கும் போது
வளத்த நாய் மட்டும் நன்றியுடன் என் காலடியில்
என்னிதயம் அதன் காலடியில்

பிரிவுத்துயர் மிகவும் கொடியது அதை பல முறை அனுபவித்தவன் அதுவே நான் பிரிவதால் பிரிபவர் ஆனந்தமடைகிறார் எனின் அதுவே எனக்கு ஆனந்தமும் கூட..


ஆயுத முனையைக் காட்டிலும் அகிம்சையை நேசிப்பவன் என்ற முறையில் இனிமேல் எந்த தனிநபர் மீதோ அல்லது ஏதாவது திரட்டிகள் நான் ஏதாவது சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒர் இடத்திலும் நான் ஒளிந்து நின்று எதிர்க்மாட்டேன். எதிர்க்க விரும்பின் நேரே வருவேன் அவ்வாறு எதிர்க்க பலம் போத வில்லையா மௌனித்து போவேன். அந்த மௌனங்கள் சம்மதங்கள் ஆகாது.

-நன்றி

ஐயோ... நம்ம பப்பியை சுட்டுட்டாங்கள்

Written by தமிழ்பித்தன் on 8:05 AM


அப்பாவும் அண்ணணும் அருகில் இருந்த தோட்டத்துக்கு மிசின் பூட்ட சென்றிருந்தனர். நான் ரீ குடித்து கொண்டிருந்தனான் சிறிது நேரத்தில் ஆறு வெடியோசைகள் தொடர்ந்து கேட்கின்றன.தொடர்ந்து ஐயோ பப்பியை சுட்டுட்டாங்கள், என்று அண்ணணுடைய குரல் கேட்கிறது. நானும் அம்மாவும் வீட்டுக்கு வெளியே ஓடியந்து பார்கிறோம். எமது செல்ல நாய்குட்டி (6 மாதம் தானிருக்கும்) பப்பி 6 குண்டுகளால் சல்லடை போடப்பட்டு சாகடிக்கப்பட்டு இறந்து கிடந்தது. எல்லோர் கண்ணிலும் நீர் கசிகிறது. இருவர் சாரத்துடன் இரு துவக்குடன் நாய்குட்டிக்கு கிட்டவந்து மச்சான் செத்துட்டுதுடா? . என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள் எவருக்கும் துணிவில்லை எதிர்த்து கேள்வி கேட்க.

அப்போது, அம்மம்மா ஏன்றா தம்பிகளா சுட்டியள் என்று கேட்கிறார் அப்போது அவர்கள் "மனிதருக்கே சாப்பிட சாப்பாடில்லை இதெல்லாம் எதற்க்கு நம்நாட்டில் என்று சொல்லி விட்டு" செல்கிறார் சிறிது நேரம் கழிந்து மீண்டும் சில வெடியோசைகள்........

ஆமாம் நான் பால் குடிக்கும் என்னருகில் ஓர் சிரங்கை பாலுக்காக ஒரு மணிநேரம் காவல் காக்குமே படுக்கும் வரைக்கும் என்னுடன் கொஞ்சி விளையாடுமே அது எங்கே..

"ஒர் உயிர் போகும் போது ஒராயிரம் கண்ணீர் பூக்கள் சிந்தப்பட்டால் ஒன்றில் அந்த உயிர் விலைமதிக்கதக்கது ((அரசியல் சினிமா வகை பிரபல்யங்களாக இருக்கலாம்)) அல்லது அந்த நாடு விலைமதிக்க தக்கது அதுவே சொர்க்கத்தின் சாட்சியம். அங்கே சித்தாந்தம், தத்துவ புரட்சி, மறுமலர்ச்சி எதுவுமே தேவையற்றது "

-- ஜோட்ச் பெனடிட்

மாயாவின் மயூரனுக்கு கண்டணம்! மொக்கை வாழ்க கும்மியும் வாழ்க!

Written by தமிழ்பித்தன் on 7:04 AM

இன்று மாயா வலைப்பூ மயூரன் அவர்கள் ரெம்ப அழுது புலம்பி தள்ளிட்டாரு. நம்ம மொக்கைகளையும் கும்மியையும் இழிவாக தரம் குறைச்சு பேசிட்டாரு. இதனால், நம்ம மொக்கைகள் கும்மிகள் ரெம்ப மனம் நெந்து இருப்பதாக அறிக முடிகிறது.

மயூரன் அண்ணா நீங்கள் பெரிய எழுத்தாளர் தரத்தில் எழுதுபவர்கள் எங்களுக்கு அப்படி எல்லாம் எழுத தெரியாது. நாங்கள் புகையிலை இடுக்குகளில் சிறிதாக தெரிகிற கிளை ஒடித்து விட்டு களைப்பில் ஆலமர நிழலில் வெட்டிப்பேச்சு பேசித்தானையா பழக்கம் எங்களுக்கு, உங்களை மாதிரி தத்துவம் அறிவியல் சிந்தனை எல்லாம் ஒத்து வராத விசயம் நாங்களும் வலைபதிகிறோம். என்கின்ற ஒரு பெருமைக்காக ஏதோ தட்டவிழைகிறோம். அது உங்களை எரிச்சலூட்டி அழவைக்கும் என்று சத்தியமாக நாம் நினைத்ததில்லை.

ஆரம்பத்தில் எழுத வேணும் என்று ஆசைப்பட்ட போது பத்திரிகைகளுக்கு அனுப்பினோம் அவை நிறைவேற வில்லை. ஆனாலும், பாடசாலையில் ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். மாதம் ஒரு இதழ் வெளியிடுவது என, முதல் தடவையாக அன்று அச்சில் வந்த எனது எழுத்துக்களை கண்ட மகிழ்சிதான், இன்றும் தொடர்கிறது, இந்த வலைப்பூவில்.ஒருடத்தையும் விடுகிறார்கள் இல்லை என்றுதானே இங்கே வந்தோம் இங்கேயிருந்தும் விரட்டினால் எங்கே பொவோம்.

கேளரவம் படத்தோனியில் சொல்வதானால் "மயூரா போக வேணும் என்றுதான் தோனுது எனக்கு தமிழ் மணத்தை விட்டால் யாரை ஐயா தெரியும் நான் யாருட்ட போக"

இனி விசயத்துக்கு வருவோம். ஆரம்பத்தில் நானும் யாழ்பாணத்திலிருந்து பதிந்து கொண்டிருந்த கால கட்டத்தில் நன்றாக தத்துவம் கவிதை என வெட்டியாக சிந்தித்து எழுதுவதுண்டு. ஒரு ஆங்கில கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஒருவன் தத்துவம் கதைக்கிறான் எனின் அவனுக்கு தனிமையில் சிந்திக்க நேரம் இருக்கிறது. அது போலவே நானும் ஒரு பொறுப்பற்றவன் என்று கூறியிருப்பார்.
கிடைக்கிற நேரத்தில் உங்கள் மாதிரியானவர்களின் நல்ல வலைப்பூக்களையும் களைப்பும் மனச்சுமை நீங்க சில மொக்கைகளையும் வாசித்து விட்டு என்ன எழுத தோன்றுகிறதோ அதையே கிறிக்கி விட்டு செல்லகின்ற ஜாதி ஐயா நாங்கள்.

உங்களுக்கு திடீர் ஞானோதயத்துக்கு காரணம் என்ன????

///இவ்வாறனவர்களின் பதிவுகளால் தான் " ஆச்சி மசாலா உமா " (அதாங்க பெப்சி உமா ) வரை Bloging ஐ குறை சொல்லும் நிலைக்கு கொண்டுபோய்விட்டது///


ஆச்சி மாமியை திட்டியமையா??? (நீங்கள் அவர் தீவிர ரசிகர் என தெரியாது எங்களுக்கு)

பின்னூட்டம் அதிகம் தேவையானால்
உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட வேலைக்கு யாரையாவது அமர்த்தலாமே??

நல்ல ஒரு பதிவுக்கு பின்னூட்டம் எதற்க்கு அதை வாசித்தவர் பயன் அடைகிறார்கள். எத்தனைபேர் வாசித்தார்கள் என்பதற்ககு கணிப்பான் இருக்கிறது.

எங்களை மாதிரி மொக்கைக்கும் கும்மிக்கும் ஆயிரம் மாற்றுக்கருத்து இருக்கும் அவர்கள் எங்களை திட்டி சபித்து விட்டு செல்ல பின்னூட்ட வசதி பயன்படுகிறது.

////கொஞ்சம் நல்லா எழுதுறவங்களும் வலையுலகை விட்டு விலகிப்போவது நிஜமான வலையுலகவாசிகளுக்கு மாபெரும் இழப்பு..///

அப்படியா??
சாதாரண வலைப்பதிவில் எதிர்த்து நிலைக்க தென்பற்றவர்கள். நாளை வாழ்க்கையில் வீசப்போகிற சூறாவளிக்கு எவ்வாறும் முகம் கொடுக்க போகிறார்கள்.

///ஒரு வலைப்பதிவர் எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதாமல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பதிவுகள் தொடஙகலாம் அதேமாதிரி திரட்டிகளையும் தொடங்கலாம் . . . //

இதற்கு எனது ஆலோசனை நீங்கள் தமிழ்மணத்தின் வகைப்படுத்தியவையை பயன்படுத்தலாம் அவ்வகைப்படுத்தலில் புதிதாக ஏதாவதை சேர்க்க விரும்பினால் தமிழ்மண நிர்வாகிகளுக்கு அறிவியுங்கள். அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது நீங்கள் வாசிக்க விரும்பும் வலைப்பூவை கூகிள் ரீடரில் சேமித்து வைக்கலாம். அல்லது ஒரு திரட்டியை நீங்களே வடிவமைக்கலாம் அதற்க்கு ரவிசங்கர் உதவுவார்.

///இனி என்றாவதொருநாள் வலைப்பக்கங்களுக்குள் நுழையும் போது தேநீர் கடையில் நடக்கும் ஒரு அரசியல் சண்டை போன்று ஒரே கூச்சலும் குழப்பமுமாக இல்லாது . ஒரு தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் நுழைந்த உணர்வு மட்டுமே ஏற்படும் சூழ்நிலை உருவாகும் , இந்த இணையப் பதிவு எனும் " நல்லதோர் வீனையை ". . .நலமுடன் பேணுவார்கள் என்ற நம்பிக்கையேடு///

ஏனையா வீணை கீணை என்று பழசோடையெல்லாம் வலைப்பூவை ஒப்பிடுகிறீர். இது நவின யுகத்து ரம்செட் போன்றது.
விவேக் சொல்லது போல தூக்கிப் போட்டு குத்துங்கோய்ய்ய்ய...யா...........

எங்கே எனது அறுஞாகொடி? (நினைவில் மலர்பவை 3)

Written by தமிழ்பித்தன் on 7:14 AM

அறுஞா கொடி என்றால் முதல் விளக்கம் கொடுக்க வேணும் பாருங்கோ பேந்து அது தெரியாமல் இது வாசிச்சு பிரியோசனம் இல்லை. அறுஞா கொடி என்றால் சிறு வயது ஆண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டப்படுகின்ற ஓரு கறுத்த கயிரோ அல்லது பவுனில் செய்ததாகவோ இருக்கலாம். சுந்தரா ரவல்ஸ் படத்தில் முரளி கடனை அடைக்க இதைத்தான் அறுத்து கொடுப்பார்.

நான் அறிகிற வயசில் நான் அணிந்து கொண்டது பவுனால்தான் இருந்தது. அந்த காலத்தில் அதை வெளியே தெரிய காட்ட வேணும் என்று கால்சட்டையை இடுப்புக்கு கீழே இறக்கிவிடுவதுண்டு. (இங்க கறுவல்களோடே சேர்ந்து நம்மடையளும் ஜீன்சை முழங்காலுக்கு கீழ விட்டு நடக்கமாட்டாமல் திரியுதுகள் அதுகள் என்னத்தை காட்ட ஆசைபடுதுகளோ?)

இப்படியான காலத்தில் தான் விடுதலைப்புலிகளும் இந்தியராணுவமும் மேதியதன் விளைவு அதுவரை இந்தியா ஈழப்போராட்டத்துக்கு வழங்கி வந்த உதவியை நிறுத்திக் கொண்டது. புலிகள் சொந்த காலில் நிற்க வேண்டிய நிலமை முதல் முதலில் நிலமை என்பதால் அதை உடனடியாக சமாளிப்பதற்காக மக்களிடமிருந்து நேரடியாக பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.பின் குழுக்கல் முறையில் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள்.

அதே நேரம் மக்கள் பெரும் பொருளாதாரப் பிரச்சினையை எதிர் நோக்கியிருந்த நேரம் மக்கள் பணம் தற்போது இல்லையே என்று எதிர்ப்பை தெரிவிக்க முற்பட்ட வேளையில் அதற்க்கு மாற்றாக 2 பவுன் தரலாம் என்று அறிவித்திருந்தது. இதை அறிந்த அப்பா வீடு வந்து இதை பற்றி அம்மாவுடன் ஆலோசனை கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்தார். நானும் அப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் வழமைபோல் காற்சட்டை இடுப்புக்கு கீழே தான் இருந்தது. எனது அறுஞா கொடி அப்பாவின் கண்ணில் பட்டுத்தொலைத்தது.
"வாடா செல்லம் குளிக்கப் போவம்" என்று கூறி (அப்பவும் யோசித்தனான் இந்தாள் ஒரு நாளும் குளிக்க வார்ப்பதுகிடையாதே என்று அப்ப அந்த சிறு மூளைக்கு எட்டவில்லை) குளிக்க வார்த்துக் விட்டு கத்தரிக்கோல் அறுஞா கொடியை கத்தரித்து எடுத்தார். ஏன் அறுக்கிறாய் என்று கேட்டதற்க்கு பிள்ளைக்கு இதை விட பெரிசா போடுவம் என்று சொல்லி விட்டு சென்றார். இதை நான் அம்மாவிடம் முறையிட அவா இயக்கம் கேட்கிறாங்கள் கொடுப்பம், திருப்ப தருவாங்கலாம்.

"என் வாழ்வின் முதல் இழப்பு அதுதான்"

அப்ப விட்டுப்போனது இன்று வரை அது இல்லை அது எங்கே??

இந்திய மண்ணே வணக்கம்

Written by தமிழ்பித்தன் on 8:53 AM

இந்தியாவுக்கு வயது 60 வது
ஓய்வு வெறும் வயதிலும்
சீறி யெலும் காளை போல்
கலக்க தொடங்யிருக்கு இப்போதான்

லேட்டா வந்தாலும் லேட்டஸா வளரும் நாடிது
பாரதா மாதா நீ வளரு படு யோரா
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று
தொன்று தொட்டு இன்று மட்டும் நீ காட்டினாய்

ஆன்மீகத்துக்கு ஒரு புத்தன்
அகிம்ஸைக்கு ஒரு காந்தி
அறிவுக்கு ஒரு அப்துல்கலாம்
அர்பணிப்புக்கு ஒரு கோடி...

அனைத்து இந்திய வாழ் மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இன்று அதிகாலை எம் வீடு தட்டி இனிப்பு வழங்கிய அந்த இந்திய சகோதரனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
(புலம் பெயர்ந்தாலும் தம்தேச வழமைகளை அவர்களும் இன்னும் தொடர்வதை கண்டு மகிழ்ச்சி)
புலம் பெயர்ந்து வாழும் இந்தியருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஓசை செல்லா போல் "நச்" சென்று காரணம் சொல்ல முடியாமல் தவிப்போருக்கு

Written by தமிழ்பித்தன் on 7:55 AM

///நான் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு காமிராவிலே கருத்தாய் இருந்தபோது நடந்திருக்கலாம் இது. இல்லையேல் மாலனின் கருத்தை அங்கேயே எதிர்த்திருப்பேன். ///என்று ஓசை செல்லா http://tamilbloggers.org/blog/?p=29 என்ற பதிவில் பின்னூட்டியிருந்தார் ஓசைசெல்லா உடனடியாக நல்ல காரணத்தை கண்டுபிடித்து தெரிவித்தமை அவரது திறமையை பறைசாற்றுகிறது பலர் அப்படியான காரணங்களை கண்டுபிடிக்க கஸ்டப்படலாம் அவர்களுக்காக சில ரிப்ஸ்



1)முதல் நாள் தின்ற நாறிப்போன இட்லி வடை வயிற்றை கலக்கியது எனலாம்

2)மாலனின் பேச்சு போரடித்தனால் பேச்சின் ஆரம்பத்திலேயே தூங்கிவிட்டேன் எனலம்

3)தொலைபேசியில் மனைவி/ உறவினர்கள் / நண்பர்கள் அழைத்தமையால் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன் என்று கூறலாம்

4)நல்ல பிகர் ஒன்று வந்தது அதைப் பார்த்து வழிந்து கொண்டிருந்தேன் என்று கூறலாம்


அடுத்த முறை இப்படி வரம்பு மீறி பேசுபவர்களை கட்டுப்படுத்த சில ரிப்ஸ்
1)கராத்தே படித்த பல வலைப்பதிவர் இருக்கிறார்கள் அவர்களை பட்டறைக்கு அழைக்கலாம் வெளிநாட்டிலிருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்(பேசுபவர் எல்லை மீறும் போது அடித்து உதைத்து வெளியே அனுப்ப)

2) அவர்களின் கையில் கறண்டை கட்டிவிட்டு அழுத்தியை நிர்வகிப்பவர் வைத்துக் கொண்டு அளவை மீறும் போது கறன்ட் சாக் பாச்சி அவரை கட்டுப் படுத்தலாம்

3)நீங்களே பேசுபவருக்கு அனாமி அழைப்பு எடுத்து மிரட்டலாம்(எல்லை மீறி பேசினால் கொலை செய்வோம் என)


"இதை கும்மியாகவோ மொக்கையாகவோ பார்க்க விரும்பாதவர்கள் உடனடியாக இப்பதிவை மூடும் படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்"

மாலன் சொன்னதை புரிந்து கொள்ளாத பெயரிலியும் ஈழத் தமிழ் பதிவர்களும்

Written by தமிழ்பித்தன் on 6:52 AM

மாலன் அவர்கள் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல ஏன் சிறிலங்காவின் பாஸ்போட்டை பயன்னடுத்துகிறார்கள் என்று பதிவர் பட்டறையில் கேள்வி எழுப்பி இன்று வலைப்பதிவு உலகில் சுப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்திட்டார். ஆனால் அவர் ஏன் அப்படி கேட்டார் என்பதை பற்றி அலசாமல் எல்லோரும் தம்பாட்டுக்கு அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஈழத்தமிழர் சிறிலங்காவின் பாஸ்போட்டை பாவித்தே வேளிநாடு அல்லது இந்தியாவுக்கு தற்காலத்தில் செல்லமுடியும் ஆகவே அவர்களை பார்த்து ஏன் சிறிலங்காவின் பாஸ்போட்டை பாவிக்கிறீர்கள் என்று கேட்டதை ஏன் வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.அவர் சொன்னதற்கான காரணங்களாக இருக்கக் கூடியவையை

1)அவர்கள் வெளிநாடு சென்று குடியேறி விடுவதால் அவர்களின் அடுத்து தலைமுறை தமிழை மறந்து விடுவார்கள் ஆகவே தமிழ் அழிவுறும் என்று கவலையுறலாம்

2)எல்லா தமிழர்களும் வெளியேறி விட்டால் விடுதலை புலிகள் பேராட்டத்துக்கு ஆள்சேர்க்க முடியாதே என வருத்துமுறலாம்

3)வெளிநாட்டிலிருந்து சென்ற பதிவர் யாராவது அவருக்கு பரிசில் பொருட்கள் இன்றி சந்திக்கப் போயிருக்கலாம்.

4)அவர்களின் உறவினர்கள் இந்தியாவிலேயே தங்குவதால் அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தால் பணவீக்கம் அதிகரிக்குமோ என அஞ்சலாம்.

5)ஈழத்தமிழர்கள் புலம்பெயரவதனால் பத்திரிகை தொழில் பாதிக்குமே என அஞ்சலாம்

6)வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சரவணாஸ் ஸ்ரேரில் அடிவாங்கியதால் புலம்பெயராவிடின் இந்நிலமை ஏற்பட்டிருக்காது, என நினைத்திருக்கலாம்.

மொத்தத்தில் அவருக்கு ஈழத்தமிழர் மீது அலாதிப்பிரியம்

நான் முதல் பார்த்த நீலப்படம் (நினைவில் மலர்பவை பாகம் 2)

Written by தமிழ்பித்தன் on 8:48 AM

அப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.
பத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்

அக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)

சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்


அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம் ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினை
அப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.

அக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்

அன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள

* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது

* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது

அவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்

*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்

*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணமாம் )

பலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)

இவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்
ஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்

பேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்

"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே"

ஹி..ஹி..சிரிங்க

Written by தமிழ்பித்தன் on 7:17 AM

ஒருவர் முடி திருத்தும் கடை நடத்திவந்தார் அவரிடம் வேலை பழக ஒரு சிறுவனும் இருந்தான் அவன் அவருக்கு எடுபிடி என்றே கூறலாம்.(குருவல்லவா வேலை பழகுவதானாலே இப்படித்தானே)

ஒரு நாள் மதியம் ஒரு மணியளவில் ஒரு இளைஞன் வந்து "அண்ணை முடி வெட்ட வேணும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்" என்றான். அதற்க்கு அவர் "தம்பி நான்கு பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வெட்டி முடியவேணும் எப்படியும் ஒன்ரரை மணிநேரமாவது எடுக்கும்" என்றார்.

அதற்கு அவன் "அப்ப நான் அண்ணை உதுல போய் ஒரு இளநீ குடிச்சிட்டு வாறன்" என்று கூறி சென்றான் ஆனால் அவன் வரவில்லை மறுநாளும் இப்படியே அவன் வர மூவர் இருந்தனால் தான் இளநீ குடித்து விட்டு வருகிறேன் என்று கூறினான்

இப்படியாக நான்கைந்து நாட்கள் நடந்தன ஒரு நாள் பெறுமையிழந்த அவர் இவன் செல்ல விட்டு தன் எடுபிடியை கூப்பிட்டு

"அவன் உண்மையில் இளநீ குடிக்கத்தான் போகிறான? அல்லது வேறே எங்காவது போகிறானா? என்று பார்த்துவா"
என்று அனுப்பினார் அவனை பின்தொடர்ந்து சென்றவன் அறக்கப்பறக்க ஓடியந்து

""அண்ணை.. அண்ணை ...அவன்""

"என்னடா உளறாமல் சொல்லடா''

""அவன் உ..உங்..உங்கட வீட்டை அண்ணை பொறான்"'

" ஆ..ஆ....ஆ..ஆ.....என்ர வீட்டை தென்னையே இல்லையேடா....?"

;;;எச்சரிக்கை;;;((தமிழ்மணத்தில் வைரஸ் தாக்கம்))

Written by தமிழ்பித்தன் on 7:29 AM

சில காலமாகவே இந்த தொற்று இருப்பதாக அறியப்பட்டாலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது.........ஆரம்பத்தில் நன்றாக தான் இயங்கியது தமிழ்மணம் (2005க்கு முன் என்று வரையறுக்கலாம்) பதிவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது எல்லோரும் ஒன்றாக செயற்பட்டார்கள். ஆனால் பிற்பட்ட காலத்தில் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க குழுக்கலாக பிரியும் தன்மை அதிகரித்தது.



அப்படி அண்மையில் தமிழில் பற்றுக்கொண்ட ஆச்சி கும்மி பதிவுகளுக்கு அதிக பின்னூட்டம் வருவதாகவும் தனக்கு பின்னூட்டங்கள் வருவதில்லை எனவும் ஆதங்கப்பட்டு ஓர் பதிவு போட்டார்(ஆச்சி சீரியஸ்சான பதிவராம் நான்கு மாதத்துக்குள் நானூறு பதிவு பொட்டு சாதனை படைத்தவராம்). அதற்க்கு ஓசையால் ஓலம் எழுப்பினார் ஒருவர்.

அதற்க்கு தமிழில் பற்றுக்கொண்ட ஆச்சிதான் கராத்தேயில் எடுத்த பதக்கத்துடன் எல்லாம் படம் போட்டார். எல்லோரும் எதிர்பார்த்தார்கள் மற்றவர் வீரப்பனுடனோ அல்லது பில்லாடனுடனோ எடுத்த புகைப்படத்தினை பிரசுரிப்பார். என ஆனால் அது நடக்கவில்லை (பேந்து போட வாடாவில் அவர் உள்ள போய் வாடி வதங்கி விடுவேன் என்ற பயம் இருக்கலாம்) பின் கும்மி பதிவராக அவரை தெரிந்து ஒரு பதிவு வந்தது. அவர் சில காலங்களுக்கு முன் உணர்சிகளால் பாதிக்கபட்டவர் (பின் உணர்ச்சி அடங்கியது வேறகதை) வேறுசிலர் ஆச்சிக்கு ஆதரவு குரல் எழுப்பினர் இது அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இது போல பல நிகழ்வுகள் நடந்தன. அனைத்தும் ரசிக்க கூடியவையாகவே இருந்தவை என்பதில் மறுப்பில்லை அவையே எல்லைகள் மீறும் போது சில நல்ல பதிவர்களை நாம் இழக்க கூட நேரிடலாம்.

"கும்மியடிப்போம் ஆனால் குட்டையை குழப்பாமல்"

கும்மிப்பதிவர் சங்கம் இதை கும்மி பதிவாக ஏற்றுக் கொள்ளுமா???????


வேண்டுகோள்:- இந்த பதிவை பார்த்து விட்டு ஆயுதங்களுடனே அல்லது காரத்தே சிலம்பம் குங்பூ போன்ற கலை பயின்ற படியோ தயவு செய்து பதிவு போடாதீர்கள் என்னால் பதிலுக்கு பதிவு போட படங்கள் இல்லை ஒட்டப் போட்டியில் ஓடுவது போலதான் படப்பதிவு போட முடியும்

""நாமலும் மொக்கை போடுவோமல்ல"""

நினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))

Written by தமிழ்பித்தன் on 5:31 AM

யாழ்பாணத்தில் 90 களின் ஆரம்ப பகுதியில் யுத்தத்தின் தாக்கத்தால் வறுமை என்பது மக்களை பிடித்து ஆட்டியது. அக்காலபகுதியில் அரச உத்தியோகத்தாரும் நிலபுல உரிமையாளர்களும் ஏனோ வெளிநாட்டு பயணங்களை ஏனோ புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த நேரம் வெளிநாட்டில் தந்தை தமையன் உள்ளவர்கள் மிக ஆடம்பரமாக திரிவார்கள். எங்களுக்கு எல்லாம் தீபாவளி புது உடுப்பே பாடசாலையில் தந்த வெள்ளை சேட்டும் நீல காட்சட்டையும் தான். அப்பாவுக்கு கொடுத்த பொலீஸ் துணியில் வீட்டுக்கு போட காட்சட்டை மற்றும் பாடசாலை பை தைத்து அம்மா தருவார்.
அண்ணா அக்காக்களுக்கு புது கொப்பியும் அவர்கள் பாவித்த கொப்பியில் மிஞ்சிய பேப்பரைக் கொண்டு கட்டிய கொப்பிதான் எங்களுக்கு

அந்த காலத்தில் எல்லாம் பாலுக்கு சீனி போடுவது கிடையாது. காரணம் சீனி அவ்வளவு விலை ஆனாலும் விருந்தினர் வரும்போதல்லாம் அவர்களுக்கு சீனி சேர்த்த பால் வழங்கப்படும். "நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே புசியுமாம்" அதுபோல அவர்களுடன் சேர்த்து எங்களுக்கும் பாலுக்கு சீனி சேர்த்து வழங்குவார். அதனால் வீட்டுக்கு யாராவது வந்தால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம்.
92 அல்லது 93 காலப்பகுதியிருக்கும் தேங்காய் 100 150 விற்றுக் கொண்டிருக்கிறது அக்காலம் பார்த்து எனக்கும் செங்கன்மாரி காய்ச்சல் வந்தது டாக்டர் இளநீர் நல்லா கொடுங்கோ என்று கூறிவிட்டார். அப்பா இளநீ வாங்க அலைந்து விட்டு ஒரு இளநீயோடு வந்தார். ஒன்றா வாங்கி வந்தீர்கள் என ஏக்கத்துடன் கேட்கிறேன். அதற்க்கு அப்பா வாயிலிருந்து பதில் வரவில்லை கண்களில் கண்ணீர் மட்டும் கசிகிறது. அம்மாவை கூப்பிட்டு 60 ரூபாவுக்கு குறைய இளநி இல்லையாம் என்றார் . அதன் தாக்கம் சில வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மைய மேம்பாட்டுக்கழகம் மானிய விலையில் வழங்கிய தென்னையை வாங்கி வீடு சுற்றிலும் நட்டுடோம். தறபோது 45 மேலே இருக்கிறது

பல இளைஞர்கள் வெளிநாடு வருவதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் இளமையில் அனுபவித்த வறுமையோமீண்டும்; ஒரு வறுமையை தாங்களோ தங்கள் குடும்பமோ அனுபவிக்க கூடாது என்ற ஒரு வைராக்கியம் அவர்கள் மனதில்.....

"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது"

பைலை பகிர்ந்து கொள்ள....

Written by தமிழ்பித்தன் on 10:10 AM








*பிளாஷ


*வீடியோ


*ஓடியோ


*இமேச்


*மற்றும் பல.......


-ஆகிய பைல்களை சேமிக்க உதவும்


-60 நாட்களில் தானாகவே அழிக்கப்பட்டு விடும்
பதிவிறக்கம் அதிவிரைவானது
காத்திருக்க வேண்டியதில்லை (உடனடி தரவிறக்கம்)
ஒரு பைலுக்கும் அடுத்த பைலுக்கும் இடையிலும் நேர கட்டுப்பாடு கிடையாது

புதுசுகண்ணா புதுசு (புதிய வலைப்பூ)

Written by தமிழ்பித்தன் on 6:56 AM

நீண்ட நாட்களாக IT என தனியே வலைப்பூ அமைக்க வேண்டும் என்ற ஆசை தற்போது ஈடேறியுள்ளது. பல வலைப்பூ நண்பர்கள் பல முறை அறிவுரை கூறினார்கள். ஏன்? கும்பலில் கோவிந்தா என்று எல்லாத்துக்கும் நேர காலம் என்று ஒன்று உள்ளதே அப்போது எல்லாம் நல்ல படியாக ஈடேறும், என்று கூறுவேன். அதற்கு தற்போது சமயம் வந்திருக்கிறது.

அமைத்தாகியும் விட்டது அதை தமிழ்மணத்தில் பதிய முயல இயல்பாக பதிய முடியாது. மின்னஞ்சல் அனுப்பு என்று வந்தது அனுப்பினேன். அனுப்பி சில மணித்துளிகளிளேயே அனுமதி கிடைத்து. பதில் வந்தது தமிழ் மணத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இங்கே போல் என்னை எழுத ஊக்கப்படுத்தும் தமிழ்மன்ற நண்பர்களுக்கும் நன்றிகள். இது வரை தந்த ஆதரவை தொடர்ந்து வழங்கி இந்த பித்தனை ஊக்கிவிப்பீர் என்ற நம்பிக்கையுடன்.......

இதுதான் தமிழிலே தனியே IT நியூஸ் களை கொண்டு வெளிவரும் முதல் வலைப்பூ என நினைக்கிறேன்

அதன் தளமுகவரி ;- www.thamizitnews.blogspot.com

online ஓடியோ எடிற்றர்

Written by தமிழ்பித்தன் on 4:21 AM


adition இல் செய்கின்ற அனைத்தையும் இதிலே செய்ய முடிகிறது



1)நேரடியாக உங்கள் குரலை பதிவு செய்தல்

2)ஒலிகளை பதிவேற்றி எடிற் செய்தல்

3)இந்த தளத்திலேயே சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்

4)ஒலித்தொகுப்புகளை பகிரலாம்



இது இணைய சேவை மையங்களிலிருந்து பதிபவர்களுக்கு நல்ல தொரு சேவை

Splice gives anyone, anywhere the ability to collaborate on music right through a web browser. Users can upload or record sounds, make songs, listen to other user's songs, make remixes, make friends and a whole lot more.
splice, splicemusic, music, sequencer, flash, online, make, remix, record, sounds, songs, friends, community, creative, commons என்று தனது சேவையை சுருக்கமாக சொல்கிறது

பின்னூடடம் இடமுன் ஒருகணம் நில்லுங்கள்

Written by தமிழ்பித்தன் on 10:57 AM

///.. சும்மா உம்மடை பக்கத்துக்கு ஆள் பிடிக்கிறதுக்காக கண்ட நிண்டதுகளையும் போட வேணாம் சரியோ.. ///

பல பின்னூட்டங்கள் என்னை மனசங்கடத்தில் தள்ளியது என்பதில் சந்தேகம் இல்லை சிலதை அழித்த பிறகு மட்டறுக்கும் முடிவை அப்படிசெய்த பின்பு வந்த பலதை பிரசுரிக்க வில்லை என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சாதாரனமாக சீண்டும் தன்னைமை கொண்ட ஒன்றை இங்கே அனுமதித்திருக்கிறேன்

தயவுசெய்து அபாண்டமான வார்த்தைகளை பாவிக்காதீர்கள் இயந்திரம் போல் ஓடும் இந்த உலகில் தமிழ் மீது கொண்ட சிறிது பற்றாலும் தமிழ்ழோடு சிறிது நேரமாவதாவது செலவிட வேண்டும் என்ற ஒரு ஆசையாலும் நாங்கள் இணையத்தில் எழுத வாசிக்க வருகிறோம்

நான் படித்த கனவான்களோ அல்லது இத்துறையில் பெரியஅனுபவம் பெற்ற பாண்டித்தியம் கொண்டவர்களோஅல்ல சற்று தகவல்தொழில் நுட்பத்தில்(IT) ஈடுபாடுமட்டுமே இருக்கிறது எனது தேடலில் கிடைக்கின்ற தகவலை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன். அதில் விளக்கம் காணது என்றபோது அதில் பின்னூட்டமிடுங்கள் அதை எங்கிருந்து தகவல்எடுத்தேனே அங்கே கேட்டு பதில் கிடைத்தால் மறுமொழி இடுவேன் அல்லது அப்படியே இருந்து விடும்.

நான் எழுதுமிடம் பொது நூலகம் இணையத்தின் முலம் அவர்கள் உலாவுவதை தவிர வேறு எதற்கும் அனுமதிப்பதில்லை. நான் இயன்றளவு பின்னூட்டங்களுக்கு பதில் தர விளைகிறேன் ஆனாலும் எனக்கு கால அவகாசம் என்பது முக்கியம் ""சுடுகுது மடியை பிடி"" என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு அப்படி இல்லாமல் நிதானமாக அவசியப்படும் கேள்விகளை கேளுங்கள் முயல்கிறேன்.

முதலில் நீங்களே முயற்சி செய்யுங்கள் தெரியாதவிடின் கேள்வி கேளுங்கள் அவை பற்றி தெரிந்த ஏனைய நண்பர்கள் பதில் தருவார்கள் இல்லைஎனின் நான் பதிலுக்கு முயற்சி செய்கிறேன்

சில இலட்சங்களை மாத வருவாய்பெறுகிறவர்கள அல்ல சாதரணமாக புலம் பெயர்தல் என்னும் ஆற்றினுள் தெரியாமல் தவறிவிழுந்து கரையேற முடியாமல் தவிக்கும் களிமண் பொம்மைகள் தலையிலோ பெரும் சுமை மனதிலே நம்பிக்கை இவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்னிடம் என்றோ ஒருநாள் கரையேறுவோமா...? அல்லது ஆற்றுடன் கரைந்து காணமல் போவோமா தெரியாது ஆனாலும் மனதில் உறுதி..

கண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்

Written by தமிழ்பித்தன் on 4:09 AM



உங்கள் மின்னஞ்சலை ஒரு தொலைபேசி இலக்கம் போல் பயன் படுத்த இது உதவும். இந்த தளத்துக்கு நீங்கள் எந்த மின்னஞ்சலை அனுப்பி உறுதிபடுத்துகிறீர்களே அதையுடைய கணணியாக மாறும். யாராவது உங்கள் மின்னஞ்சலை காண்பவர்கள் உங்களுக்கு நேரடியாக அழைப்பை ஏற்படுத்தலாம் (இந்த சேவையை அவர்களும் வைத்திருக்க வேண்டும்) இதற்கு எல்லா வகையான மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். இது கிட்டத்தட்ட ஜீமெயில் மின்னஞ்சலில் உள்ள வசதி போன்றது ஆனால் இதில் கதைக்கும் வசதியும் இருக்கிறது

இலவச போன் call

Written by தமிழ்பித்தன் on 12:58 PM


http://www.viatalkfree.com/ இலவசமாக உலகலாவிய ரீதியில் அழைப்பை எடுக்கலாம்
*எந்த மென்பொருளும் தேவையில்லை
*அங்கத்தினர் ஆக தேவையில்லை

இலவச audio editing software

Written by தமிழ்பித்தன் on 11:58 AM



நீங்கள் ஒலிப்பதிவு போடுவதற்க்கு தடையாக audio editing மென்பொருள்தான் என்றால் இனி கவலையை விடுங்கள் இதே ஒரு இலவச ஒடியோ எடிற்றிங் மென்பொருள் http://audacity.sourceforge.net/
என்ற முகவரியில் சென்று தரவிறக்கி ஒலிப்பதிவை தொடருங்கள்

இதில் கையாளக்கூடிய பைல் வகைகள் mov, aac, m4a and mp3

பிற்குறிப்பு;-அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒத்திசைக்கும்

samsung இன் புதிய mp3 player

Written by தமிழ்பித்தன் on 9:23 AM

அண்மையில் வெளியாகி பலர் மனங்களை கவர்ந்த இது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இது 2 GB,4GB என்ற அளவுகளில் கிடைக்கிறதுஇதன் ஏனைய சிறப்பு வசதிகள்


*bluetoothஇதனை பயன் படுத்தி


1) ஏனைய bluetooth உள்ள கருவிகளிலிருந்து பைல்களை மாற்றிக் கொள்ளலாம் (கைத்தொலைபேசியில் இருக்கும் பாடலை இந்த வசதி மூலம் கணணி இன்றியே பாடலை இதற்க்கு பதிவேற்றலாம்

2)கைத்தொலை பேசியில் வரும் அழைப்பை இதைக் கொண்டு ஏற்று கதைக்கலாம்

3)கம்பியற்ற headphone or speaker ஐ பயன்னடுத்தலாம்


*GAME வசதிflash வகை game களை பதிவேற்றி விளையாடலாம்


*விரும்பிய உள்screen colour


*1.30 சார்ச் செய்தால் 30 மணிநேர பற்றரி வலிமை


*1.8" அளவு LCD color screen* MP3,WMA , MPEG4 ,photo and textஆகியவற்றை play செய்யும்


மேலதிக விபரம் இங்கே




msn இன் புதிய தளம்

Written by தமிழ்பித்தன் on 4:42 AM

msn ஆனது http://www.liveearth.msn.com/ என்கின்ற வீடியோ சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் உலகில் நடக்கின்ற இசைநிகழ்சிகளை வீடியோவாக காணகிடைகிறது. வீடியோ இசை அல்பங்களும் கிடைகிறது. பதிவு செய்தால் நீங்களும் உங்களிடம் உள்ள வீடியொவை பதிவேற்றலாம்.

பைல் சேமிக்க நல்ல தளம்

Written by தமிழ்பித்தன் on 4:21 AM



இது பைல்களை சேமித்து வைக்க உதவுகிறது இதனது சிறப்பு வசதிகள்

*அனைத்து வகை பைல்களையும் பதிவேற்றலாம்

*வரையறையில்லை (இதுதான் இது வரை பெரிய பிரச்சினையாக இருந்தது)*நேரடியான தரவிறக்கம் அதாவது நீங்கள் உங்கள் தளத்திலேயே வைத்து பதிவிறக்க இணைப்பு கொடுக்கலாம் rapid share போல அங்க இங்க என அலைய வேண்டியதில்லை

*விரைவான தரைவிறக்கம்( download manager இசையும் தன்மை)

*3Gநெற்வேர்க் இருந்தால் நேரடியாக உங்கள் பொனிலிருந்தும் பதிவேற்றலாம்

10 $ இலவச தொலைபேசி அழைப்பு

Written by தமிழ்பித்தன் on 2:56 PM

http://www.mobivox.com/ ஆனது july 4 அமெரிக்க சுதந்திரதினத்தை முன்னிட்டு அன்று மட்டும் 10$ இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் வசதியை தருகிறது மேலதிக செய்தி இங்கே

புதிய வரவு மின்னஞ்சல்கள்

Written by தமிழ்பித்தன் on 2:01 PM


பல மின்னஞ்சல் சேவைகள் பாவனையில் உள்ளன. ஆனாலும் பலரால் yahoo gmail hotmail(livemail) போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன பல வேறு துறைகளில் சக்கை போடுவனவும் தற்போது களத்தில் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன அப்படி புதிதாக அறிமுகமாகிய சில மின்னஞ்சல்கள்.



இத்தளமானது வீடியோ ஈமெயில் ஆனுப்புவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றபடி வழமையான அனைத்து வசதிகளும் இதில் உண்டு நேரடியாக நீங்கள் வெப் கமரா கொண்டு வீடியோ மின்னஞ்சலை தயாரித்து அனுப்பலாம். எந்த மென்பொருளும் உங்களுக்கு தேவையில்லை ஓடீயோவும் அதுபோலவே, 250 mb வரையான வீடியோவை ஒரே தடவையில் அனுப்பலாம்.


hi5 போல நண்பர்களை இணைக்க உதவிய twitter தற்போது தனது மின்னஞ்சலைப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு கணக்கு வைத்திருப்போரே உள்நுழையலாம் மற்றவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதுதான் அதில் உள் நுழைந்தவர்கள் அனுப்ப வேண்டும். நான் கோரிக்கை விடுத்திருக்கிறேன், கிடைத்தால் உங்களுடன் பகிர்கிறேன்.


online இலவசமாக சிவாஜி திரைப்படம்

Written by தமிழ்பித்தன் on 9:28 AM

ரஜனியின் சிவாஜி திரைப்படம் வெளிவந்து சக்கை போட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவற்றை கள்ளமாக இணையத்திலிலும் பதிவிறக்க கிடைகிறது அப்படி தேடியதில் கிடைத்த சில தளங்கள்
http://www.techsatish.com/2007/06/sivaji-boss-tamil-movie-download.html

http://welcome-softwaredownloads.blogspot.com/2007/06/download-sivaji-full-movie-dvd-quality.html



பதிவிறக்க முடியாதவர்கள் நேரடியாக பார்க்க
http://www.muft.tv/index.php?option=com_content&task=view&id=10262&Itemid=81

பிற்குறிப்பு ;- இந்த தளங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை கண்டதை சொல்கிறேன் அவ்வளவுதான்

rapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு(2)

Written by தமிழ்பித்தன் on 9:17 AM

rapidshare இல் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு கீழ் உள்ள tool ஐ பதிவிறக்கி நிறுவினாலும் கீழே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

RapidShare Credit Card Generator
RapidDown 5.9
Grabber 1.4.7 C
RapidShare.com Hack
Bypass 1 hour limit
Rapidshare.com Downloader
RapidShare Proxy Tool
RapidShare Premium Accounts

http://www.getupload.com/file/4067/Rapidshare-New-Tools-2007-rar.html

நீங்கள் மற்றவர்களுக்கு இடும் கருத்துக்களை திரட்ட

Written by தமிழ்பித்தன் on 11:00 AM

நீங்கள் மற்றவர்களுக்கு இடும் கருத்துக்களை 5 வழிகளில் திரட்டலாம்
http://co.mments.com
http://commentful.blogflux.com/
http://bleu.west.spy.net/diggwatch/
http://del.icio.us/

rapidshare இன் பிரச்சனைக்கான தீர்வு

Written by தமிழ்பித்தன் on 6:58 AM


rapidshare ஆனது சில வாரங்களுக்கு முதல் தனது சேவையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது அதாவது இலவசமாக நாங்கள் தரவிறக்கம் செய்வோமாக இருந்தால் பின்வரும் பிரச்சனைகளை நாங்கள் சந்திக்க வேண்டிவரும்

1)ஒரே நேரத்தில் ஒரு பைலை மட்டுமே தரைவிறக்கலாம்

2)ஒரு பைல் தரவிறக்கி அடுத்த பைலை தரவிறக்க சுமார் 1 மணித்தியாலங்கலாவது காத்திருக்க வேண்டும்

3)வேக ஊக்கியை பயன்படுத்த முடியாது


இதற்கெல்லாம் தீர்வாக இந்த மென்பொருளை நிறுவினால் நீங்கள் கட்டணப்பயனாளர் என்ன வசதிகளை எல்லாம் பெறுகிறாரோ நீங்களும் அவற்றைப் பெறலாம்


மகாபாரதத்தில் விஞ்ஞான ஆருடகள்

Written by தமிழ்பித்தன் on 6:38 AM


ந்து சமயம் முன்னைய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்து இருந்திருக்கலாம். பின் ஏற்பட்ட ஓர் மிகப்பெரிய போர் அல்லது இயற்க்கை சீற்றத்தால் அந்த குழு சிதைக்கப்பட்டிருக்கலாம். சரி அதற்க்கு நாங்கள் அதன் இதிகாசங்களை சீர்தூக்கிப்பார்த்தல் வேண்டும். அவை உண்மையாக இருந்தால் இந்து சார்ந்தவை உணமை எனவும், அவை பொய்யாயின், அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நல்லவளர்ச்சிப் பாதையில் பயணித்தார்கள், விஞ்ஞான சிந்தனை உடையவர்களாக இருந்தார்கள், என்றும் கருத முடியும். ஓர் வளர்ச்சி அடைந்த குழுவால் அன்றி இப்படி மற்றவர்களால் இப்படி சிந்திக்க முடியாது. சரி இனி இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
மற்ற இதிகாச புராணங்களை காட்டிலும் மகாபாரதமானது பல கருத்துக்களை சொல்கிறது. அதில்..,
கதையின் ஆரம்ப கட்டத்தில் திருதராட்டிரின் மனைவி காந்தாரி கர்ப்பமுற்றிருந்தால். அச்சமயத்தில் பாண்டுவின் மனைவி குந்தி தனக்கு கிடைத்த வரத்தை வைத்து தருமதேவனின் உதவியுடன் முதல் குழந்தை தருமனை பெற்றெடுக்கிறார். இதை அறிந்த காந்தாரி கோபத்தில் தன் வயிற்றை கல்லால் குத்துகிறார். அதனால் கரு சிதைவடைந்த நிலையில் வெளிவருகிறது இதையறிந்த பெரியவர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைகின்றனர் அப்போது அங்கே வந்த முனிவர் அதற்க்கு தீர்வு இருப்பதாக கூறுகிறார் இதை அறிந்தவர்கள் அவரிடம் அப்பிரச்சினையை தீர்க்குமாறு வேண்டுகின்றனர் அதற்க்கு இசைந்த முனிவர் 100 அதிசய குடங்களை உருவாக்கி அதனுள் சிதைந்த கருவை நூறாக பிரித்து இடுகிறார். பின் அந்த குடத்துக்குள் குழந்தைகள் வளர்ச்சி அடைந்து பிறக்கின்றன் இது அதில் வருகின்ற ஓரு காட்சி.
அதாவது தற்காலத்தின் பரிசோதனைக்குழாய் குழந்தை குளோனிங்முறைமை குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை கண்ணாடிப் பெட்டியினுள் வைத்தல் போன்ற செயல்களுக்கு ஒப்பிடலாம் இக்காலத்தில்பயன்டுததுவதற்க்கு மாற்றாக வேறு முறைகள் அக்காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

தொடரும்...

PC WORLD எனும் சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்

Written by தமிழ்பித்தன் on 6:46 AM


PC WORLD எனும் கணினிசஞ்சிகை இணையத்தளங்கள் சார்பாக நடத்திய நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்

கோப்பு பகிர்வதற்க்கு
http://www.allpeers.com/ (winner)
http://www.pando.com/
http://www.utorrent.com/

கோப்பு சேமிப்பான்
http://www.mozy.com/(winner)
http://www.mediamax.com/ (நான் அறிமுகம் செய்தது)
http://www.xdrive.com/ (நான் அறிமுகம் செய்தது)

மின்னஞ்சல்
http://www.gmail.com/ (winner)
http://www.mail.yahoo.com/
http://www.hotmail.com/

இமேச் எடிற்றிங்
http://www.picasa.google.com/(winner)
http://www.snapfire.com/
http://www.irfanview.com/

பொழுது போக்கு இலவச மென்பொருட்கள்
www.videolan.org/vic (winner)
http://www.itunes.com/
www.foobar2000.org

ஓடியோ வீடியோ messnger
www.jajah.com(winner)
www.skype.com
www.gizmo.com(நான் அறிமுகம் செய்தது)
www.messenger.yahoo.com

நன்றி:pc world

இணையத்தில் எவ்வளவு எல்லாம் சம்பாதிக்கிறார்கள்

Written by தமிழ்பித்தன் on 7:08 AM

யார்யார் கூகுளின் அட்சென்ஸ் மூலம் எவ்வளவு எல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று நாங்கள் அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. நான் அறிந்தவற்றை பரிசோதித்துப் பார்த்தேன் .பரிசோதனை முடிவுகள் கீழே, இது உண்மையா என என்னால் உறுதி கூற முடியவில்லை. அட்சென்ஸ் பாவிப்பொர் பரிசோதித்து முடிவை கூறுங்கள். எனது தளத்தில் அது இல்லாததனால் அது பூச்சியம் என்று காட்டுவதை அவதானியுங்கள்.எவ்வளவு பணம் சம்பாதித்தார்கள் என்பதை தளத்தில் விபரமாக காட்டும்.


நீங்கள் இணைய முகவரியை பதிந்தாலே போதும் முழுவிபரத்தையும் வரைபடமாக வழங்குகிறது










வெல்க தமிழுக்கு வாழ்த்துக்கள்

Written by தமிழ்பித்தன் on 6:53 AM


சங்கு கொண்டு முழங்கிய எங்கள் தமிழ்
இப்போது ஜெனிவாவிலே வெல்க
என்று முழங்குகிறது

பார்புகழ வாழ்ந்த
தமிழ் உலக ஆதரவுவேண்டி
நிற்க்கும் தருணமிது

எத்தனை உயிர்களை இழந்துவிட்டோம்
எம் உரிமைக் குரலுக்காய்
உலகே உனக்கு கேட்கிறதா
தமிழர்களின் அவலக்குரல்

சிங்கத்தின் தொண்டைக்குள்
சிக்கிய முயலாய் தவித்போது
வந்தான் தலைவன் படைகொன்று
சிங்களம் வென்றான்

அவன் கனவு நிறைவேறும்
தருணத்திலே உலகே
உனக்கோர் மணியோசை
தமிழனுக்கோர் நாடு உருவாகிறது

என்று இந்தியாவை பிறக்கவிருக்கும்
உன் அயல் பிள்ளைக்காக
குரல் கொடு

என்று முழங்கும் வெல்ல தமிழுக்கு தமிழ்பித்தன் தமிழ் வலைப்பதிவு சார்பாக வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஒரு ரூபாவுடன் இந்தியாவுக்கு கதைக்க

Written by தமிழ்பித்தன் on 8:15 AM

முதல் தடவையாக உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு ஒரு ரூபாவுக்கு(இந்திய ரூபா) ஒரு நிமிடம் வரை கதைக்க முடியும் அத்துடன் 50 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாகவும் கதைக்க முடியும் அத்துடன் இலங்கைக்கு 11 ரூபாவும் (இலங்கை ரூபா) என அசத்தல் சலுகைகளுடன் புதிய தளம் அறிமுகம் இது அறிமுகமாகி சில வாரங்களுக்குள்ளேயே voip அனைத்து சேவைகளையும் வீழ்த்த ஆரம்பித்து விட்டது
http://www.12voip.com
மேலும் 50 சதத்தில் உலகம் முழுவதற்க்கும் sms அனுப்பி பெற (இலவசம்) முடியும்
நீங்கள் விரும்பினால் உங்கள் போனிலிருந்தும் அழைப்பை ஏற்படுத்த முடியும் அதற்கும் வழிகளை கூறுகிறது
http://www.12voip.com/en/phone-to-phone.html

கொழும்பை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர்

Written by தமிழ்பித்தன் on 5:30 AM

1983 ம் ஆண்டு இனக்கலவரத்தை காரணம்காட்டி பல தமிழர்கள் அக்காலத்தில் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர் (((அப்போது வேளியேறியதில் எங்கள் குடும்பமும் அடங்கும்)) அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐ.தே.க அதை சிறப்பாக செய்து முடித்தது. அதன் தாக்கம் விடுதலைப் போடாட்டத்தின் ஓர் தீடீர் திருப்பமாக மாறியதை எவராலும் மறக்க முடியாது. அலைஅலையாக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களிலே தம்மை இணைத்துக்கொண்டனர்.
பின் 1996 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அஞ்சிய மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அது விடுதலைப்புலிகளின் ஆளனி வளர்சிக்கு ஒர் தூண்டு கோலாக விளங்கியது. அதன் காரணமாக முல்லைத்தீவு ஆனையிறவு போன்ற அசைக்கவே முடியாது. என கற்பனை செய்யப்பட்ட தளங்கள் கைப்பற்றப்ட்டன .
உலக நடப்பை ஒப்பு நோக்குவோமாக இருந்தால் ஜேர்மன் சர்வதிகாரியான கிட்லரால் பல யூதமக்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர் .((அப்போது வெளியேற்றப்படடவர்களில் ஒருவர்தான் அணு ஆயுதத்தின் தந்தை எனக் கொள்ளப்படுபவர் அவர்பின் மெரிக்காவுக்காக அதை உருவாக்கினார்)) இதன் தாக்கம் கிட்லரின் சர்வதிகாரத்தின் முடிவில் யூதமக்களுக்கு இஸ்ரேல் என்கின்ற தனிநாட்டுக்கு வழிகோலியது பின் வந்த இஸ்ரேலியரால் காசா பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அதன் வெளிப்பாடு பாலஸ்தீனத்துக்கு வழிவகுத்தது .
தற்போது தமிழ்மக்கள் இதை எவ்வாறு எடுத்து நோக்கப்போகிறார்களோ? சர்வதேசம் அல்லது இந்தியா இதை எவ்வாறு நோக்க போகிறது என்பதில் தான் அதன் மூலம் கிடைக்கப் போகின்ற பலன்கள் அல்லது மறுதளிப்புகள் அடங்கியிருக்கும்


கொசுறு;- நாடாளமன்ற கூட்டத்தொடரில் இதை தொடக்கியப் பேசிய மகேஸ்வரனை தொடர்ந்து பேசிய ஜேவிபி உறுப்பினர் ஜே.வி.பி.யின் அனுரா குமார திசநாயக்க இச்செயலுக்காக சிங்கள மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றார் ஆமாம் ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம் அதுபோல கிடக்கு

ஹி..ஹி.. சிரிங்க(8)

Written by தமிழ்பித்தன் on 4:40 AM

தாயைப் பார்த்து மகள் கேட்டாள் "ஏனம்மா உனக்கு தலைமுடி நரை விழுகிறதே" என்று அதற்கு தாய் "நீ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாய் பிரண்டுடனும் சுற்றும்போதும் எனக்கு ஒரு முடிவீதம் நரைக்கிறது எனக்கு முடிநரைக்க கூடாது என நீ நினைத்பாயாக இருந்தால் இனி பாய்பிரண்டுகளுடன் ஊர் சுற்றாதே" என்றாள் தாய். மகள் அதற்கு சளைக்காமல் "அதுதானா அம்மம்மாவுக்கு எல்லா முடியும் நரைவிழுந்திருக்கிறதா?"என்றாள்.

இலவச டாக்டர்

Written by தமிழ்பித்தன் on 6:37 AM


உங்கள் கணணி இலவசமாக ஒன்லைனில் வைரஸ் பரிசோதித்து தர முன்வந்திருக்கிறது இந்த தளம் இது பயர்பாக்ஸ்க்கும் எக்புளோளருக்குமே ஒத்துப்போகும்

ஹி..ஹி.. சிரிங்க(7)

Written by தமிழ்பித்தன் on 4:26 AM

நம்மட ஆளுக்கு விஞ்ஞான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போழுது ஆசிரியர் நம்மடை ஆளைப்பார்த்து கேட்டார் நீருக்கு குறியீடு சொல் என்று நம்ம ஆள் சலைக்கவேயில்லை உடனேயே hijklmno என்று கூறி முடித்தார். ஆசிரியர் அவனைப் பார்த்து இதென்னடா பதில் என்றார். அவன் அதற்க்கு "நீங்கள் தானே நேற்று நீருந்த குறியீடு H to O (H2O)என்று கூறினீர்கள்" என்றான்.
அவனே மீண்டும் சமூகக் கல்வி வகுப்பில் போய் அமர்கிறான் அப்போது ஆசிரியர் அவனைப்பார்த்து "அமெரிக்கா எங்க கிடக்கு சொல் பார்க்கலாம்" என்றார். அதற்க்கு அவன் "தெரியாது ரீச்சர்" என்றான். அப்போது "ரீச்சர் அப்ப வாங்குக்கு மேலே ஏறடா" என்றார் அதற்க்கு அவன் "வாங்குக்கு மேலே ஏறி நின்று பார்த்தால் அமெரிக்க தெரியுமா ரீச்சர்" இது எனக்கு முன்னாடியே தெரியாமல் போச்சே

ஹி..ஹி.. சிரிங்க(6)

Written by தமிழ்பித்தன் on 6:55 AM

நம்மடை ஆள் ஒருத்தரு விமானத்தில் பயணம் செய்திருக்காரு அவருடன் அமெரிக்கன் ரஷயன் ஜப்பான்காரன் போன்றோர் பயணம் செய்திருக்கிறார்கள் எல்லோரும் கூடி கதைக்க தொடங்கிய இடத்தில் அவரவர் தத்தம் நாடுகளை பற்றி புழுகத்தொடங்கி விடுகிறார்கள்

அமெரிக்கன்;-எங்கள் நாட்டு விமானம் நிலவைதொட்டுக்கொண்டு தொட்டுக்கொண்டுதான் போகும்

மற்றவர்கள்;- உண்மையாகவா?

அமெரிக்கன்;-சீ..சீ...கொஞ்சம் கீழாலதான் போகும்

ரஷயன்;- எங்கள் நாட்டு ராக்கட்டெல்லாம் நட்சத்திரத்தையெல்லாம் தொடும்

மற்றவர்கள்;-உண்மையாகவா?

ரஷயன்;- சீ...சீ.. சற்று கீழாலதான்

ஜப்பான்;-எங்கள் நாட்டு கட்டடமெல்லாம் வானத்தை முட்டும்

மற்றவர்கள்;- உண்மையாகவா??

ஜப்பான்;-சீ..சீ.. சற்றுக் கீழதான் நிக்கும்

நம்மடையாளுக்கு ஒன்றும் புழுகுவதற்க்கு கிடைக்கவில்லை கனநேரம் யோசித்த பின்பு திடீரெனஎங்கள் ஊர் சனமெல்லாம் மூக்காலதான் சாப்பிடுறவை

மற்றவர்கள்;- உண்மையாகவா?

நம்மடையாள்;- சீ..சீ.. சற்று கீழால உள்ளதால சாப்பிடுறவை

ஹி..ஹி.. சிரிங்க(5)

Written by தமிழ்பித்தன் on 4:23 AM

ஒரு தடவை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் தந்தையரா மகன்மாரா புத்திசாலி என்று வாக்குவாதம் ஆரம்பித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வழியால் வந்த படித்த ஒருவரைப்பார்த்து யார் புத்திசாலி என்று தீர்ப்புக் கூறுமாறு கேட்டார்கள் . அதற்கு அந்த பெரியவர் தீர்ப்பு கூற வேண்டுமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தரப்பு சார்பான ஆதாரத்தை முன் வையுங்கள். என்றார்சிறுவன் உடனே ஓர் ஆதாரத்தை சென்னான் ஐயா எடிசன் தான் பல்பை கண்டு பிடித்தான். அவனது தந்தையால் அது முடியவில்லை ஆகவே மகன்தான் அறிவாளி என்றான்.

ஹி..ஹி.. சிரிங்க(4)

Written by தமிழ்பித்தன் on 6:56 AM

ஒருதடவை வியாபாரக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே, நம்மடையாள் ஒராள் அதை விடுப்புப் பார்ப்பதற்க்கு போயிருக்காரு, அங்க எல்லா இடமும் சுத்திப்பார்கிறாரு திடிரென அவருக்கு அதிர்ச்சி ஒரிடத்தில் மூளைகளை குவித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே விலைப்பட்டியலும் தொங்கவிடப்பட்டிருந்தது.

ஜப்பான்-0.50$
அமெரிக்கா-5.00$
ரஷயா-50.00$
இலங்கை மற்றும் இந்தியா-10000.00 $

என்று இருந்தது எங்கட ஆளுக்கு இலங்கை இந்திய மூளைகள் விலை கூடவே என்று பெரிய சந்தோஷமாய்ப் போச்சு. ஏன் எங்கட நாட்டு மூளைவிலை கூட என்று கடைகாரரிடம் விசாரித்தார் . அதற்க்கு கடைகாரர் மற்ற மூளைகள் எல்லாம் பாவித்தவை அதாவது செக்கன் கான்ட் இலங்கை இந்திய மூளைகள் பாவிக்கவே இல்லை அதாவது நியூ பிரான்ட் என்றார்.

தட்டுங்கள் கொடுப்பார் இலவசமாக

Written by தமிழ்பித்தன் on 6:56 AM

உங்களுக்கு தேவையான மென்பொருட்கள், ஆங்கில திரைப்படங்கள், பாடல்கள் கேம்ஸ் தொலைக்காட்சிதொடர்கள் (அதற்காக கோலங்கள் சித்தி என்று எல்லாம் தேடாதீர்கள்) ஆங்கில தொடர்கள் மற்றும் அனைத்தையும் தேடுங்கள் இலவசமாக கொடுப்பார் இந்த புதிய கடவுள்
http://katz.ws/

எச்சரிக்கை:--சிறுவர்களை அனுமதிக்காதீர்கள் ஏனென்றால் இங்கே வயது வந்தவருக்கான படங்களையும் தேடமுடியும்


இது தமிழ்பித்தனின் 100 வது பதிவின் சிறப்புப் பரிசு

ஹி..ஹி..சிரிங்க(3) பித்தனின் 100 வது பதிவும்

Written by தமிழ்பித்தன் on 4:52 AM

ஒருதடவை காதலனிடம் காதலி தனது தந்தை தனக்கு அன்பளிப்பாக வழங்கிய வைர நெக்லசில் உள்ள பிளேன் பென்ரனை(டாலர்) காட்டி "எப்படி இருக்கிறது' என்று கேட்டால். அதற்க்கு அவன் "பிளேனைக்காட்டிலும் அதன் ஓடுபாதை நல்லா இருக்கு" என்றான்.

இது பித்தனின் 100 வது பதிவு

ஹி..ஹி.. சிரிங்க(2)

Written by தமிழ்பித்தன் on 6:24 AM

ஒரு தடவை சிறுவன் ஒருவனுக்கு அவனது தந்தை அடியோ அடியென அடித்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட அந்த சிறுவன் அழுதுகொண்டு கோவிலைநோக்கி செல்கிறான். அங்கு சென்றும் அவன் அழுகிறான். இதை அவதானித்த கடவுள் அவன் மீது இரக்கம் கொண்டு கீழ் இறங்கி வந்து "ஏன் அழுகிறாய் குழந்தாய்" எனக் கேட்டார். அதற்க்கு அந்த சிறுவன் "எனக்கு எனது தந்தையை பிடிக்க வில்லை அவர் தினமும் என்னை போட்டு அடிக்கிறார் அவரை நீங்கள் தான் கொல்ல வேண்டும்" என்றான் அந்த சிறுவன். அதற்க்கு கடவுள் "சின்ன பிரச்சினைக்கு போய் அவரை கொல்லலாமா" என்று கேட்டார். அதற்கு சிறுவன் " எத்தனை அரக்கரை கொண்டிருப்பாய் அதுபோல என் அப்பாவையும் நீ கொல்ல வேண்டும்"என்றான். இறைவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத அந்த சிறுவன் பிடிவாதமாக இருந்தான் பின் இறைவன் அவனுக்கு அந்த வரத்தை அளிக்கிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த சிறுவன் வீடு செல்கிறான் அங்கே அவனது தந்தை பேப்பர் வாசித்துகொண்டிருப்பார். இதனைக் கண்டு சிறுவன் திகைத்தபடி நிற்க பக்கத்து வீட்டிலிருந்து அழுகுரல் வரும் "ஏனுங்க எங்களை எல்லாம் விட்டுட்டுப் போட்டியளா? இன்றுவரை நல்ல சுக தேகியாக தானே இருந்தியள்" என்று

button உருவாக்க

Written by தமிழ்பித்தன் on 6:54 AM

உங்கள் வலைப்பக்கத்தை அல்லது வலைப்பூவை அழகு படுத்துவதற்க்கு தேவையான button களை இலகுவாக உருவாக்க இத் தளம் உதவுகிறது நான் உருவாக்கிய ஒர் button கீழே

http://www.mycoolbutton.com/

ஹி...ஹி.....சிரிங்க

Written by தமிழ்பித்தன் on 4:53 AM

கனடாவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் வங்கிக்க சென்று தான் தொழில் காரணமாக ஐரோப்பா செல்ல இருப்பதாகவும் அதற்காக கடனாக 5000 தேவை என்று கேட்டார். அதற்க்கு வங்கி அதிகாரி நீங்கள் கடனை பெறவேண்டுமாயின் எமக்கு பெறுப்புக்கு ஏதாவது தரவேண்டும் என்றார். அதற்க்கு அந்த தொழில்அதிபர் எனது விலையுயர்ந்த கார் வெளியே நிற்கிறது அதை வைத்துக் கொண்டு கடனைத் தாருங்கள் என்றார். அதற்க்கு சம்மதித்த வங்கி அதிகாரி காரின் சாவியை பெற்றுக் கொண்டு பணத்தை வழங்கினார். பின்வங்கி வேலையாள் காரை வங்கிக்கியின் கீழ் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் விட்டு விடுகிறார். இருவாரங்கள் கழித்து வந்த அந்த தொழில் அதிபர் தனது கடனை திருப்பி தரப்போவதாக கூறினார் அதற்க்கு வங்கி அதிகாரி உங்களுக்கு வங்கிய கடன் $5000 அதற்கான வட்டி $16.30 என்றார். அவரும் பணத்தை முழுமையாக வழங்கி விட்டு தனது காரை திருப்பிக்கொண்டார். அப்போது அந்த வங்கி அதிகாரி எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு பெரிய பணக்காரராக இருக்கும் நீங்கள் ஏன் போயும் போயும் $5000 ஐ எங்கள் வங்கிடம் இருந்து பெற்றீர்கள் என்றார். அதற்க்கு சிரித்தவாறு "இந்த கனடாவில் 15 டாலருக்கு இருவாரங்கள் காரை பார்க்க பண்ண யார்தான் விடுவார்கள் சொல்லுங்கள்" என்றார்.

youtube இன் புதிய player

Written by தமிழ்பித்தன் on 6:25 AM

youtube ஆனது இப்போது புதுமெருகுடன் தனது வீடியோக்களை play செய்வதற்காக புது player பற்றி ஆராய்ந்து வருகிறது வெகு விரைவில் அது வெளிவராலாம் இது அந்த பிளேயரின் தோற்றம்

தமிழ்மணத்தின் ஓர வஞ்சனை

Written by தமிழ்பித்தன் on 10:22 PM

தமிழ்மணம் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. அதாவது வழமையாக நாம் ஏதும் பதிவிட்டால் பதிவின் கீழே பதிவின் ஓரிரு வரிகளை காட்டும். அதற்காக, நான் உட்பட பலர் அந்த முதல் இரு வரிகளை கவர்ச்சியாக எழுதுவது வழக்கம். அப்படி கவர்சியாக எழுதி பதிவிட்ட கடைசிப்பதிவின் அந்த இரு வரிகளை தமிழ்மணம் திரட்ட வில்லை. ஏதோ கடமைக்கு தலைப்பை மட்டும் திரட்டியது. அதே நேரம் வெளியான மற்றவர்களின் பதிவின் முதல் வரிகளை திரட்டியது. இதற்கு காரணம் என்ன? ஓரவஞ்சகமா?

இவற்றையெல்லாம் கனகச்சிதமாக புகைப்படம் பிடித்தார். எமது தமிழ்மணத்துக்கான செய்தியாளர் மேதாவி அவர்கள்
அவற்றை கீழே காணலாம்
படம் 1


படம்2


படம்3



தமிழ்பித்தன் மீது ஏதும் கோபமா? அல்லது அதற்காக ஏதும் சிறப்பான முறையில் பதிய வேண்டுமா? பதில் தாருங்கள்
இதில் சம்மந்தப்பட்டிருப்பது பார்பனியமா? (((ஆமாம் பார்ப்பனியம் என்றால் என்னையா அடிக்கடி தமிழ்நாட்டுபதிவுகள் சிலதில் காணக்கிடைக்குது)))
ஈழப்பதிவாளன் என்ற பாகுபாடா?
வேற ...என்னத்தை வைத்து இதுக்க கொல்லுப்படுகிறவர்கள் ஆஆ....
இந்து என்கின்றதாலா? ( ஹி.. ஹி.. நானும் தமிழ்மணத்தின் மீது ஒரு குற்றைச்சாட்டை சுமத்திட்டோமல்ல.......ஆ)


இனி விசயத்துக்கு வருவோம் அப்படி ஏன் திரட்டுகிறது தமிழ்மணம் நாம் பதியும் போது மேலே புகைப்படம் போடுவதாலா முந்தி அப்படி நடப்பதில்லை நேற்று மட்டும்தான் நடந்தது தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்



கலக்கும் பைல் சேமிப்பான்

Written by தமிழ்பித்தன் on 8:27 PM


mediamax என்பது தற்போது பலரின் வாயில் முணுமுணுக்கும் அளவுக்கு பிரபல்யம் ஆகிய ஒன்றாகி விட்டது. பயனர் கணக்கு ஒன்றுக்கு 25GB வரையாக பைல்களை சேமிக்க வசதி வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது முற்றிலும் இலவச சேவை பல தளங்கள் 1GB கொள்ளவை தரும் போதே பணம் பறிக்க நினைக்கும் இத்தருணத்தில், இதன் வருகை பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் மைக்ரோ சாப்ட் தனது பைல் சேமிப்பு சேவையை ஆரம்பத்தமையும் குறிப்பித்தக்கதே, (இணைப்பு 1)

நான் பாடலைப் பதிவேற்றும் காட்சி
(படம் தெளிவற்று இருந்தால் அதில் அழுத்தவும்)

அண்மையில் rapidshare இலவச பயனருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தமை யாவரும் அறிந்ததே! ( ஒரு நேரத்தில் ஒரு பைலை மட்டும் தரவிறக்கலாம் ஒரு பைலை தரவிறக்க எவ்வளவு நேரம் எடுத்தமே அதே அளவு நேரம் அடுத்த பைல் தரவிறக்குவதற்காக காத்திருக்க வேணும். இவை rapidshare இன் கொடுமைகள்)

நான் பதிவேற்றிய பாடலைக் கேட்க இங்கே சுட்டுங்கள்

அப்ப எல்லோரும் media max க்கு மாற தயாரா?
நல்ல விசயங்கள் இருந்தால் மாறித்தானே ஆகணும் ஹி..ஹி

திமுக வில் நடப்பது என்ன நேரடி செவ்வி

Written by தமிழ்பித்தன் on 5:37 AM

திமுக்காவில் பல அரசியல் மாற்றங்கள் நடந்து முடிந்து விட்டன. அந்த அரசியல் சூறாவளியில் அகப்பட்டு தயாநிதிமாறன் அள்ளுண்டு செல்லப்பட்டார். உண்மையில் அவர் திமுகாவுக்கு எதிராக செயற்பட்டவரா? அல்லது அனைத்தும் திரிபு படுத்தப்பட்டனவா? இன்னும் அழகிரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணம் என்ன? அண்ணணால் பதவியிழந்த தம்பிக்காக கலாநிதிமாறன் செய்யப்போவது என்ன? தற்போது திமுக ஆதரவாளர்களின் மனநிலமை என்ன போன்ற கேள்விகளுக்கு தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து காந்திராஜன் வழங்கிய சிறப்புச் செவ்வியை கேட்கலாம்.
இது வலைப்பதிவு சாராதவர்களின் கருத்தை அறிதல் அல்லது அவர்களை வலைப்பதிவுக்குள் இழுக்கும் முயற்சி.

இலவச போன் call

Written by தமிழ்பித்தன் on 12:03 AM


இலவசமாக 48 நாடுகளில் உள்ள உங்களின் 10 நண்பர்களுக்கு நேர வரையறையின்றி கதைக்க முடியும். இது பதியும் போது போன் நம்பரை வாங்கிக் கொள்வதால் இரண்டாவது கணக்கிற்க்கு சாத்தியம் இல்லை. ஆகவே நிதானமாக 10 நண்பரையும் தெரிவு செய்யுங்கள். இதற்க்கு பிரத்தியேகமாக மென் பொருள் ஏதெயும் நிறுவ வேண்டியதில்லை, உங்கள் போன் மூலமே தொடர்பு கொள்ளும் முறையை கையாள்கிறது.
http://www.yak4ever.com/

மைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம்

Written by தமிழ்பித்தன் on 9:28 PM


மைக்ரோ சாப்ட் கூகிளுடன் போட்டி போடும் விதமாக பல சேவைகளை அறிமுக படுத்தியும் மேம்படுத்தியும் வருகிறது அந்த வரிசையில் இந்த பைல் சேமிப்பானை அறிமுகப்படுத்தியிருக்கிறது இதனுள் 500mb வரை fileகளை சேமிக்க முடியும் ஒவ்வொரு பைல்களும் 50 mb வரையிருக்கலாம் இதுவரை பல தளங்கள் இந்த சேவையை செய்தாலும் இது நம்பிக்கையாக இருக்கம் என கருதப்படுகிறது

http://folders.live.com/
இதற்க்குமுதல் xdrive தளம் பைல் சேமிப்பதில் சக்கை போடு பொட்டது அதை aol வாங்கியதும் நினைவிருக்கலாம்

வலையோசை வானொலி

Written by தமிழ்பித்தன் on 4:38 AM

அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று அன்னையர் தின சிறப்பு வலையோசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது வந்து உங்கள் தாயாரிட்க்கு வாழ்த்தையும் அவரின் மறக்க முடியாத சுவையான சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
அடுத்த உலக நடப்பு பகுதியில் தினகரன் பத்திரிகை எரியூட்ட பட்டதற்கான சிறு விவாதம்
என்பன இடம் பெறும் கீழே உள்ள சுட்டி மூலம் இணைந்து கொள்ளுங்கள்

ஒலிபரப்பு நிறைவடைந்தது

திமுகவை ஆளும் சர்வதிகாரம்

Written by தமிழ்பித்தன் on 6:17 AM

தினகரன் பத்திரிகையின் கருத்துக்கணிப்பும் அது அடித்து நெருக்கப்பட்டமையும் அதன் பின்புல காரணங்களும் பற்றிய ஓர் அலசல் ஒலிப்பதிவாக

Google Earth 4.1 (beta) Released

Written by தமிழ்பித்தன் on 9:02 PM

கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது.
இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை
ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே





மேலதிக தகவல்கள் அறிய இங்கே போங்கள்

பதிவிறக்க இங்கே செல்லுங்கள்

தொலைக்காட்சியையும் ஆரம்பித்தது lastfm

Written by தமிழ்பித்தன் on 1:04 PM



last fm இது வரை தனது இலவச FM சேவையை வழங்கி வந்தது. இதன் மூலம் நாம் பல பாடல்களை பிளேலிஸ்ட் முறையில் பதிவேற்றி வானொலியாக ஒலிக்கவிடலாம் என்பது யாவரும் அறிந்ததே. இது தற்போது lasttv என்கின்ற இலவச தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது

wii கேம்களை ஒன்லைனில் விளையாட?

Written by தமிழ்பித்தன் on 7:14 PM



பல மனதுக்கு பிடித்தமான இலகுவான கேம்கள் இங்கே இருக்கின்றன விளையாட்டு ரசிகர்கள் போய் விளையாடிப்பார்க்கலாம் http://www.wiiplayable.com



நான் விளையாடி கேம் http://www.wiiplayable.com/game.php?gameid=91 புஸ்சுக்காக நான் சுடுபட்டேன் நல்ல கலாதிதான் போங்கள்

அம்மாவுக்கு ஓர் ஒலிப்பதிவு

Written by தமிழ்பித்தன் on 6:09 AM

உன்விழியில் எனை வைத்துக்காத்தவளே,
நீ கலங்கிய போதும் என்னை கலங்காமல் காத்தவளே,
காலம் எமை பிரித்து வைத்து விட்டது.

பள்ளிப்பருவத்திலே பாடசாலை விட்டு,
வீடு திரும்பும் போது வீட்டுமுன் சுடுமண் பட்டு,
கதறும் போது ஓடிவந்து அணைத்தவளே,
அப்போது நான் சிந்தித்தது இல்லை உனக்கும் சுடுமென்று!

நாட்டிலே பொருளாதாரத்தடை உணவுக்கோ பெரும் பஞ்சம்,
வீட்டிலே பெரும் கஸ்டம்-அப்போது,
நீ உண்டாயோ தெரியாது எமக்கு வயிரார ஊட்டி விட்டாய்,
அப்போது எனக்குப் புரிய வில்லை உனக்கும் பசிக்கும் என்று!

உன்னை வெல்ல தெய்வம் இல்லை-அந்த
தெய்வத்தின் வார்த்தையை மீறி இங்கு வந்து,
வாழ்கையை தொலைத்து விட்டேன்.
வசந்தத்தை இழந்து விட்டேன்.

"பித்தம் கொண்டு சித்தம் மறந்த இந்த பித்தன்
எப்பொதுதான் உன் கடன் தீர்ப்பானோ?"

ஒலிவடிவில் கேட்க கீழே கேளுங்கள்


மிகப்ப்ப்ப்....... பெரிய.......url உருவாக்க

Written by தமிழ்பித்தன் on 10:00 PM

நீங்கள் உங்கள் தளத்துக்கு மிகப்பெரிய url உருவாக்க நினைக்கிறீர்களா?
நான் எனது தளத்துக்கு உருவாக்கிய url இது

http://www.hugeurl.com/?MThmZjU4N2QyZTdkMWFmMGM4MDlmOGE1YjY0
ZjAzYzEmMTImVm0wd2QyUXlVWGxXYTJoV1YwZG9WVll3Wkc5alJsWjBUVlpP
V0Zac2JETlhhMUpUVmpGYWMySkVUbGhoTWsweFZqQmFTMk15U2tWVWJHaG9U
VmhDVVZadGVGWmxSbGw1Vkd0c2FsSnRhRzlVVjNOM1pVWmFkR05GZEZSTlZU
VkpWbTEwYTFkSFNrZGpTRUpYVFVad1NGUlVSbUZqVmtaMFVteFNUbUY2UlRG
V1ZFb3dWakZhV0ZOcmJGSmlSMmhZV1d4b2IwMHhXbGRYYlVaclVsUkdXbGt3
WkRSVk1rcElaSHBHVjJFeVVYZFpWRVpyVTBaT2NscEhjRlJTVlhCWlZrWldh
MVV5VW5OalJtUllZbFZhY1ZscldtRmxWbVJ5VjI1a1YwMUVSa1pWYkZKRFZq
QXhkVlZ1V2xaaGExcFlXa1ZhVDJOdFNrZFRiV3hYVWpOb1dGWnRNSGRsUjBs
NFUydGthVk5GV2xSWmJHaFRWMVpXY1ZKcmRGUldiRm93V2xWb2ExWXdNVVZT
YTFwWFlrZG9jbFpxU2tabFZsWlpXa1prYUdFeGNGaFhiRnBoVkRKT2RGSnJh
R2hTYXpWeldXeG9iMWRHV25STlNHaFBVbTE0VjFSVmFHOVhSMHBJVld4c1dt
SkhhRlJXTUZwVFZqRmtkRkp0ZUZkaWEwcElWbXBKZUUxR1dsaFRhMlJxVWtW
YVYxWnFUbTlsYkZweFUydGthbUpWVmpaWlZWcHJZVWRGZUdOR2JGaGhNVnBv
VmtSS1QyUkdUbkphUmxKcFZqTm9WVlpHWTNoaU1rbDRWMWhvWVZKRlNtOVVW
bHBYVGxaYVdFNVZPVmhTTUhCNVZHeGFjMWR0U2toaFJsSlhUVlp3V0ZreFdr
ZFdWa3B6VkdzMVdGSlZjRWxXYlhCS1pVWkplRmRzYUZSaE1sSnhWVzE0ZDFk
R2JITmhSazVPVFZad2VGVnRNVWRVTWtwR1kwWndXR0V4Y0ROWlZXUkdaV3hH
Y21KR1pGZE5NRXBKVm10U1IyRXhaRWRVYmtwb1VqTm9WRmxZY0ZkbGJHUlla
VWM1YVUxWFVucFdNV2h2VjBkS1JrNVdVbFZXTTJoSVZHeGFWMlJIVWtoa1Iy
aHBVbGhDV1ZacVNqUlZNV1IwVTJ0b2FGSnNTbGhVVmxwM1YwWnJlRmRyZEdw
aVZrcElWbGQ0YTJGV1pFZFNhbHBYWWxSRk1GWlVSbHBsUm1SWldrVTFWMVpz
Y0ZWWFZsSlBVVEZaZUZkdVVrNVdlbXh4V1d0YWQyVkdWWGxrUjBacFVtdHNN
MVJzVm5kV01ERnhVbXRvVjFaRldreFdha3BQVWpKS1IyRkhhRTVXYmtKMlZt
MTBVMU14VlhoWFdHaFhZbXhhVjFsc2FFTldSbXh5Vm01a1YxWnNjSGhWVjNo
clZrVXhXRlZzYUZkTmFsWlVXVmQ0UzFack5WbFJiRlpYWWtad1dWWkhkR0Zo
TWs1elYyNVNhMUl5YUZSV2ExWktUVlprVjFadFJtcE5WMUl3VlRKNGMxWlda
RWhoUjBaVlZteHdNMWxWV25kU2JIQkdUMVU1YVZKWVFqWlhWbFpyWXpGVmQw
MVdXbWxsYTFwWVdXeG9RMVJHVWxaYVJWcHNVbTFTV2xscldsTmhSVEZ6VTI1
b1YxWXphR2hhUkVaYVpVWmtkVlZ0ZUZOWFJrcFpWa1phWVZsV1RrZFdiazVX
WW1zMVYxWnRlR0ZXYkZKV1ZXNUtVVlZVTURrPQ==


இது தமிழ்மணத்துக்கு

http://www.hugeurl.com/?YmZkYWQ3M2YwNjhhNmMzNmFhZTZlNjk2ZTIw
YTYyN2ImMTImVm0wd2QyUXlVWGxXYTJoV1YwZG9WVll3Wkc5alJsWjBUVlpP
V0Zac2JETlhhMUpUVmpGYWMySkVUbGhoTWsweFZqQmFTMk15U2tWVWJHaG9U
VmhDVVZadGVGWmxSbGw1Vkd0c2FsSnRhRzlVVjNOM1pVWmFkR05GZEZSTlZU
VkpWbTEwYTFkSFNrZGpTRUpYVFVad1NGUlVSbUZqVmtaMFVteFNUbUY2UlRG
V1ZFb3dWakZhV0ZOcmJGSmlSMmhZV1d4b2IwMHhXbGRYYlVaclVsUkdXbGt3
WkRSVk1rcElaSHBHVjJFeVVYZFpWRVpyVTBaT2NscEhjRlJTVlhCWlZrWldh
MVV5VW5OalJtUllZbFZhY1ZscldtRmxWbVJ5VjI1a1YwMUVSa1pWYkZKRFZq
QXhkVlZ1V2xaaGExcFlXa1ZhVDJOdFNrZFRiV3hYVWpOb1dGWnRNSGRsUjBs
NFUydGthVk5GV2xSWmJHaFRWMVpXY1ZKcmRGUldiRm93V2xWb2ExWXdNVVZT
YTFwWFlrZG9jbFpxU2tabFZsWlpXa1prYUdFeGNGaFhiRnBoVkRKT2RGSnJh
R2hTYXpWeldXeG9iMWRHV25STlNHaFBVbTE0VjFSVmFHOVhSMHBJVld4c1dt
SkhhRlJXTUZwVFZqRmtkRkp0ZUZkaWEwcElWbXBKZUUxR1dsaFRhMlJxVWtW
YVYxWnFUbTlsYkZweFUydGthbUpWYnpKVlYzaDNZa2RGZUdORVdsZGlXRUpJ
VmtSS1UxWXhaSFZVYkZKcFZqTm9WVlpHWTNoaU1XUnpWMWhvV0dKWVVrOVZi
VEUwVjBaYVdHUkhkRmROVjFKSldWVmFjMWR0U2toaFJsSmFUVlp3ZWxreWVH
dGtWbkJHVGxaT2FXRXdjRWxXYlhCTFpXczFWMWRzYUZSaE1sSndWV3RhUzFZ
eFVsaE9WemxPVFZad2VGVXlkR0ZpUmxwelYyeHdXR0V4Y0ROWmEyUkdaVWRP
U0U5V2FHaE5WbkJ2Vm10U1MxUXlVa2RVYmtwaFVteEtjRlpxVG05V1ZscEhX
VE5vYVUxc1NucFdNalZUVkd4a1NGVnNXbFZXTTFKNlZHeGFWMlJIVWtoa1Iy
aHBVbGhDV2xkV1ZtOVVNVnAwVW01S1QxWnNTbGhVVmxwM1YwWnJlRmRyZEd0
U2EzQjZWa2R6TVZZeVJYcFJWRXBYWWxSRk1GWlVSa3BsUm1SWldrVTFWMVpz
Y0ZWWFZsSkxZakZzVjJKR2FHcGxhMXB4V1d0YWQyVkdWblJOVldSV1RXdHdT
VlpYY0VkV01ERjFZVVJPV21FeVVrZGFWV1JQVWpGYWMyRkdhRlJTVlhCS1Zt
MTBVMU14VVhsVVdHaGhVMFphVmxscldrdGpSbFp4VW10MFYxWnNjRWhXVjNS
TFlUQXhSVkpzVGxaU2JFWXpWVVpGT1ZCUlBUMD0=


அம்மாடியோயோயோ?
என்ன தலையே சுத்துகிறாதா?
.இதற்க்கு உதவியது இந்த தளம் http://www.hugeurl.com/
இப்படியும் தளம் இருக்கிறதே

என் வாழ்வியலின் சாட்சியங்கள்

Written by தமிழ்பித்தன் on 5:27 PM

வசந்த காலத்தில் நிற்பது அறியாமல் கோடைக்கு
ஏங்கும் குயில்கள் போல,
கஞ்சி தரும் காசாப்பு கடைக்காரனே கழுத்தறுக்க போகிறான்
என அறியாத ஓர் ஆட்டைப்போல,

தாய்மையின் பாசமும் - பணத்தின்
பிண வாடையும் புரியாத பாவியாக,
தாயின் அந்த தீர்க்கதர்சனமான வார்த்தைகளை
புரிந்து கொள்வதற்க்குள் புழுதிக்குள் புழுவாகி,


தாயின் பஞ்சனை மடியறியா,
பற்றைக் காட்டினுள் கண்ட இலவம்
பஞ்சுக்காய் ஏங்கிய பாவியாய்,
இப்போதுதான் வலிக்கிறது பற்றையின் முற்கள்

கால நதியிலே கலந்துவிட்ட வாழ்க்கையை
கரையேற்றத்துடிக்கும் அவலத்தின் நினைவுகள்
கரையேற விடாமல் தடுக்கம் -சில
பாசபந்த பிணைப்பின் வலிமைகள்

சிறகிழந்த கிளியை சீண்டுகிறது
ஓர் கழுகு
கிளிக்கும் சிறகுமுளைத்தால்
அதுவும் தப்பிக்கதான் நினைக்குமே

தாமரையில் உள்ளவரை அதன்
அருமை அறியாத பனித்துளி
சேற்றில் விழுந்த பின்பு
திரும்ப முடியாது முழிக்கிறது



இவ்வாரத்தை தாய்மை வாரமாக தமிழ்பித்தன் கொண்டாடுகிறது வருகின்ற 13 ம் திகதி அன்னையர் தினம்.
""அனைத்து அன்னையர்களுக்கும் உங்கள் செல்லப்பிள்ளை இந்த தமிழ்பித்தனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்"'

உங்கள் புளொக்கை back up செய்ய

Written by தமிழ்பித்தன் on 2:30 AM

உங்கள் புளொக்கை back up செய்து சேமித்து வைக்க உதவுகிறது இந்த தளம்
நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பிய மற்ற வலைப்பூக்களையும் சேமிக்கலாம்ஆமாம் உங்களுக்கு தள முகவரி மட்டும் தெரிந்தால் போதும்

https://www.blogbackuponline.com

எனது அபிமான வானொலி தமிழக சூரீயன் FM க்கு 4 வது பிறந்த தின வாழ்த்துக்கள்
(ஊரில் தெலைக்காட்சி அன்ரனாவழியாக கேட்டேன் தற்போது கனடாவிலிருந்து இணைய வழியாக கேட்கிறேன் யாருக்காவது றேடியோ மிட்சியின் இணைய ஒலிபரப்பு முகவரி தெரிந்தால் தரவும் மிட்சிசுச்சியின் குரல் கேட்டு கன நாளாச்சு)

புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு

Written by தமிழ்பித்தன் on 4:52 AM

புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ் பரபரப்பு பேட்டி கீழே

கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர்.

தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா!

ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது)

தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெற்காசியாவுக்கு மட்டும் அல்ல முழு உலகத்துக்குமே அச்சுறுத்தல்தான் முக்கியமாக அமெரிக்காவுக்கு.

எங்களுக்கு தற்போது கிடைத்த புலனாய்வுத் தகவலின் படி இவர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாவிக்கும் விமானத்தொழில்நுட்பம் வேற்றுகிரகத்தார் வழங்கியவையே இவர்கள் விமானங்களுக்கும் பறக்கும் தட்டுக்கும் உள்ள ஒற்றுமையே அதை வெளிப்படையாக கூறும்

முதலாவது பறக்கும் தட்டைப்போலவே இவர்கள் விமானமும் ராடர்கருவியினுள் சிக்கவதில்லை

இரண்டாவது இரவினுள் மட்டுமே தாக்குதல் செய்வது

மூன்றாவது சத்தம் இன்றி பறப்பை மேற்கொள்வது

இவர்களால் பகலில் தாக்குதல் செய்ய முடியாது. இதை உறிதிப்படுத்தியே எமது அமைச்சர் ஒருவர் சவால் விடுத்திருந்தார். அத்துடன் இவர்களிடம் இன்னும் பல பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம். என அஞ்சுகிறேன்

முன்னொரு தடவை(2001 ம் ஆண்டு) பொலநறுவைக் காட்டுப்பகுதியில் வேற்றுக்கிரகத்தார் வந்து இறங்கினார்களே அது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது புலிகளை காணச்சென்ற அவர்களது பறக்கம் தட்டே பாதை மாறி அருகிலுள்ள பொலநறுவையினுள் தரைவிறங்கியது.

இவர்களது இந்த வெளிக்கிரக வாசிகளுடனான தொடர்பால் முழுஉலகத்துக்குமே ஆபத்து இதை ஓர் உள்நாட்டுப் போர் எனக்கருத முடியாது. இது பூமிக்கும் வேற்றுக்கிரகத்தவருக்கும் இடையான யுத்தம் இதை முறையடிக்க முழுஉலகமும் திரண்டு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்


தமிழ்பித்தன் செய்தியாளர்:-இவ்வளவு பயப்பீதியினுள்ளும் இந்த கட்டுநாயக்காவினுள் இருந்து இவ்வளவு நேரம் பேட்டி வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்

நான் மனதுக்குள் பாடும் பாடல்கள்

Written by தமிழ்பித்தன் on 9:46 PM

எல்லா ஈழத்தமிழனின் வாழ்வைப்போல எனது வாழ்வும் புலம்பெயர்தல் என்பதினுள் சிக்கி சிதறிய வேளையில் இப்பாடல்களை பாடத்தோன்றுகிறது.
இரு வகையாக தரப்பட்டுள்ளது எனது குரல்பதிவுடன் பாடல்களின் சிறுபகுதியை இணைத்து தொடர்ந்து வருவது


பாடல்களுக்கான குரல்களுடன் ழுமுமையான பாடல்கள்


இலவச போன் call

Written by தமிழ்பித்தன் on 1:41 PM

mediaringtalk
இலவசமாக 8 நாடுகளுக்கு இதன் மூலம் கதைகலாம் எந்த நேர வரையறையும் இல்லை மற்றவரும் இதில் கணக்க வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்தியாவிறக்கு குறைந்த கட்டணம்
இலவசமாக கதைக்கக் கூடிய நாடுகள்



நேற்றுமதியம் கனடா நேரப்படி இது வரை வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கை 10000 எனக்காட்டியது ஆமாம் 3 ம் மாதம் 11 ம் திகதி மீள் ஆரம்பிக்கபட்ட தமிழ்பித்தன் வலைப்பூ ஒன்ரை மாதங்களே கடந்து விட்ட நிலையில் 10000 ஐ எட்டியுள்ளது இந்த காட்டியை முதல் தடவையாக பொருத்தம் பொழுது அதில் 55 எனக் காட்டிக்கொண்டிருந்தது
தமிழ்பித்தன் தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ள உங்கள் ஆசியை வேண்டி.......


""அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் தொளிலாளர் தின நல்வாழ்த்துக்கள்"'

இரத்தம் தோய்ந்த அந்த நாட்கள்

Written by தமிழ்பித்தன் on 7:41 PM

அன்று ஒரு நாள் மதிமயங்கும் மாலைப்பொழுது நாங்கள் வழமையாக சிறுவர் பெரியோர் வேறுபாடுகள் அற்று குவிக்கப்பட்டிருந்த மணலிலே இருந்து விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென வல்வெட்டித்துறையிலிருந்து பலத்த துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தங்கள் கேட்டன. அப்பா திடீரென எழுந்து சைக்கிளையும் எடுத்துக்கொண்டு என்ன நடந்தது என்று அறிய தனது ஆலமர அரட்டை நண்பர்களை நாடிச்சென்றார். பின் அப்பா வந்து நடந்ததை கூறினார்

ஆமாம் நான் கூறும் காலப்பகுதி இந்திய அமைதிப்படை இலங்கையில் அமைதியை ஏற்படுத்துமுகமாக தமிழர்தாயக பகுதியெங்கும் குவிந்திருந்தகாலமது. அன்று வழமை போல் தமது ரோந்து நடவடிக்கைகளுக்காக சென்ற இந்திய இராணுவத்தின் மீது சிறு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டு சிவன் கோவிலின் பின் வீதியால் ஓடத்தொடங்கினான். அவனை துரத்திக்கொண்டு ஏராளமான இராணுவத்தினர் சென்ற வேளையில் கோயிலின் உட்புறம் ஒளிந்திருந்த விடுதலைப்புலிகளின் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே பல படையினர் இறக்க மற்றவர் தப்பித்திக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் வல்வெட்டித்துறை முகாமைச் சேர்ந்த படையினர் ஆவார்கள்.

இதையறிந்த பல குடும்பங்கள் என்ன நடக்க இருக்கிறதோ என்ற அச்சத்தில் இரவிரவோடு இரவாக எங்கள் கிராமத்தை நோக்கி படை எடுக்கின்றனர். ஆனாலும் மறுநாள்காலை வரை ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதிசெய்த பின்னர் தங்கள் அன்றாட கடமைகளுக்காக ஊர்திரும்புகின்றனர்.
எங்கள் அம்மம்மா கூட எங்கள் வீட்டில் விளைந்த காய்கறிகளை கொண்டு வல்வெட்டித்துறைச் சந்தைக்கு புறப்பட்டு விட்டா.."

காலை ஒரு பதினொருமணிளவில் தீடிரென பொலிகண்டி முகாமிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் வல்வெடடித்துறை சந்தியில் இறக்கி விடப்படுகின்றனர். அதாவது முதலில் சந்தை கட்டடத்துக்குள் புகுந்தவர்கள். அங்கே இயங்குகின்ற கலைச்சோலை புத்தக கடையில் வேலை செய்த அவரது மகன்களை சுட்டு விட்டு கடையையும்கொழுத்திவிட்டு பின் சந்தையின் உட்புறத்தினுள் சென்று கண்முடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தையும் வாள் வீச்சுக்களையும் செய்கிறார்கள். மக்கள் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முதலே எல்லாம் நடந்து முடிந்தது.

பின் அங்கிருந்து வெளியேறியவர்கள் நாளாபக்கமும் பிரிந்து சென்று மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீதும் வீடுவீடா சென்று தாக்குதல் நடத்துகிறார்கள் அதில் ஒரு குழு ஒரு திரையரங்கத்தை அப்படியே அழிக்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அனைத்து சத்தங்களும் தெளிவாக கேட்கிறது சத்தம் வரவர கிட்ட கேட்பது போல இருக்கவே நாங்கள் உடுப்பிட்டியை நோக்கி நகர்ந்தோம். ஆனால் வந்தவன் தீருவில் பகுதியை தாக்கிவிட்டு திரும்பி விடுகிறான் ஆனால் தீருவில் பகுதியை சேர்ந்தவர்கள் முன்னதாகவே இடம்பெயர்ந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் இருக்கவில்லை.

மாலை 5 மணியளவில் அப்பா என்னையும் ஏற்றிக்கொண்டு அம்மம்மாவைத் தேடி புறப்படுகிறார் தீருவில் தாண்டி சிவன் கோவிலின் முன் வீதியை அடைந்த போது அங்காங்கே மக்கள் பிணங்களை அகற்றுவதை காண முடிந்தது. நான் சிறுவன் என்பதனால் அப்பா உடனே தன் சாரத்தை கிழித்து என் கண்களை கட்டி விடுகிறார். சந்தையை அடைந்த நாங்கள் அம்மம்மாவை தேடுகிறோம். பின் அம்மம்மா ஒரு மூலையில் அழுதபடி இருப்பதை கண்டு ஆனந்தம் அடைகிறோம் .பின் அவாவையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறோம்
அம்மம்மா உட்பட 25 பேர் ஒரு மலசல கூடத்தினுள் ஒழிந்து தப்பிக்கொண்டனர்.

என் கண்கட்டப்பட்டிருந்தாலும் அப்போது வீசிய இரத்தவாடை இப்போதும் நாசியை விட்டு விலகமறுக்கிறது ஆமாம் அத்தாக்குதலில் மொத்தம் 83 அப்பாவி பொதுமக்ககள் அநியாயமமாக கொல்லப்பட்டிருந்தனர்

இந்திய தேசமே எம் தந்தை தேசம்
எங்களை ஏன் அழித்தாய்
எம்மால் அப்போது எமக்குள்
அழத்தான் முடிந்ததே

வேலியாகத் தானே பார்த்தோம் உன்னை
நீயே எம்மை மேய்ந்தாயே
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை
இரக்கமின்றியே நசித்துக் கொன்றாயே

காந்திய தேசமே காந்தியம் இதுதானா?
காலனின் கயிரெடுத்து நேரே வந்தாயோ
தமிழனின் உயிர் குடித்து
குலம் அழிக்க

வல்லரசு என்று கூறி வல்லூராகி வந்தாய்
வசந்தம் வீசிய வல்வெட்டித்துறையில்
வாடைவீசச் செய்தாய்
வதைகள் பல செய்தாய்

இந்திய ராணுவம் படுகொலைககள் செய்த இடங்கள்(எனக்கு தெரிந்தவை மட்டும்)
யாழ் வைத்தியசாலைப் படுகொலை
பிரம்படிப் படுகொலை

எம் இதயங்களில் என்று அந்த வடு மாறுமோ தெரியாது. ஆனாலும் இது தான் தமிழீழத்தின் தனிசோகக்கதை இல்லை ஆயிரமாயிரம் சோகங்கள் நிறைந்து. அனைத்தையும் பார்த்து விட்டு எமக்குள்ளே மவுனமாக அழுகிறோம். நாங்கள் சபிக்கப்பட்டவரா? வாழத்தான் ஆசையற்றரவரா? எமக்கு ஏன் வாழ அருகதை இல்லையா? எம்முன்னோர் கட்டிவளர்த்த தேசம் அதில் வாழ உரிமையில்லையா? வந்தவனும் போனவனும் தீண்டிப்பார்க்க நாங்கள் என்ன குரங்காட்டிக் குரங்குகளா?

எங்களுக்கு நீதி சொல் எவரும் இல்லையா?

நாடும் நடப்பும்( பத்திரிகை தரத்தில் கேலி்சித்திரம்

Written by தமிழ்பித்தன் on 4:52 AM

செய்தி:-இலங்கையணி உலககிண்ண போட்டியில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வி அதேவேளை கொழும்பில் வான்புலிகளால் எண்ணைக்குதங்கள் தாக்குதலுக்கு உள்ளானது

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

நீங்கள் பார்க்கும் வீடியோவை இலகுவாக பகிர

Written by தமிழ்பித்தன் on 9:33 PM


நீங்கள் இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பரா? அப்படி பார்த்து ரசிக்கும் வீடியோக்களை உங்கள் வலைப்பூ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நீண்ட நேரத்தை செலவு செய்கிறீர்களா?
அது இப்போது இலகு ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிளிக்கில் உங்கள் விருப்ப வீடியோ உங்கள் வலைப்பூவை அடையும் அதற்க்கு இந்த தளம் உதவும்.

http://vodpod.com


இதில் இரண்டு வகையாக பகிரலாம்

முதலாவது வகை


இரண்டாவது வகை



ஒரே நேரத்தில் பலருடன் வீடியோ உரையாடல் செய்ய

Written by தமிழ்பித்தன் on 2:45 PM

அதாவது நீங்கள் ஒரே நேரத்தில் பலருடன் conversations. முறையில் உரையாட விரும்புகிறீர்களா? முதல் தடவையாக அதற்க்கு உதவி செய்கிறது. இந்த தளம். இது தங்களுடயதில் குரலும் தெளிவாக இருக்கிறது. என்று கூறுகிறது நீங்கள் எதற்க்கும் ஒருக்கால் முயன்று பாருங்கள்
http://oovoo.com/

Photo Sharing and Video Hosting at Photobucket

இவர்கள் கிரிக்கட் அறிவித்தால் எப்படி இருக்கும்(ஒலிப்பதிவு)

Written by தமிழ்பித்தன் on 5:20 PM

இலங்கை உலக கிண்ணத்தை கைப்பற்றும் என எதிர்பார்த்திருந்த அனைத்து ரசிகர்கள் முகத்திலும் சோக ரேகைள். அவர்களை மகிழ்விக்கு தமிழ்பித்தன் இதை பதிய நினைக்கிறது.
வானிலை அறிவிப்பாளன் மற்றும் கிருபானந்த வாரியார் அறிவிக்கிறார்கள்.

இலங்கை வெல்வதற்கான சகுனங்கள்

Written by தமிழ்பித்தன் on 7:10 AM



இலங்கை வெல்வதற்கான சகுனங்கள் தெரிவதாக தெரிகிறது. 1996 ம் ஆண்டு மழை குறுக்கிட்டதை எவராலும் மறக்க முடியாது. அப்படி இம்முறையும் குறுக்கிட்டிருக்கிறது.
அத்துடன் 1996ம் ஆண்டும் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதி, இவற்றை யெல்லாம் பார்க்கும் போது அனேகமாக இலங்கைக்கு சாத்தியம் அதிகம், அது மெய்பட இறைவனை பிரார்த்திப்போம். என்று ஜோசிய திலகம் சாத்திர சக்ரவர்த்தி காலநதி தமிழ்பித்தன் ஆருடம் கூறியிருக்கிறார். பொருத்திருந்து பார்ப்போம் ஹி...ஹி

பரிசோதனை ஒலிபரப்பு முடிந்தது

Written by தமிழ்பித்தன் on 5:26 AM

எமது பரிசோதனை ஒலிபரப்பு வெற்றிகரமாக முடிந்தது.
ஒலிபரப்பு ஆரம்பித்தவுடனேயே வாடிக்கையாளர்களும் வேடிக்கையாளர்களும் வந்து குவியாவிட்டாலும் சற்று சுமாராக இருந்தது சுமார் ஏழு அன்பர்களுடன் உரையாட முடிந்தது அதில் பெரும்பான்மையானோர் வலைப்பூ பதியாத அன்பர்கள்.
முதலில் பெலாரஸ் நாட்டிலிருந்து சிம்பு தூத்துக்குடியிலிருந்து காந்தி நோர்வேயிலிருந்து சூர்யா என்பவரும் தொடர்பு கொண்டு எம்முடன் உரையாடினார்கள். தொடர்ந்து இவ்வொலிபரப்பு பிரதி வெள்ளி தோறும். இடம்பெறும். இம்முறை இனங்காணப்பட்ட சில குறைபாடுகளை களைந்து அடுத்து வரும் ஒலிப்பதிவு மிகச் சிறப்பாக இடம் பெறும்.

வலையுலகில் நேரடி ஒலி அஞ்சல்

Written by தமிழ்பித்தன் on 4:32 AM

தமிழ் வலைப்பூ வரலாற்றில் ஒர் அளப்பெரிய சாதனை ஆமாம் தமிழ் வலையுலகில் முதல் தடவையாக ஓர் வலைப்பூ வானொலி அறிமுகம்

"வலைப்பூவோசை "

உங்கள் தணியாத இசைத்தாகத்தை ஒரு மணிநேரத்தினுள் தணிக்க வருகிறது வலைப்பூவோசை
உங்களுடன் ஒட்டிநின்று உறவாடி உங்களை மகிழ்விக்க வருகிறது
* நீங்கள் நேரடியாக பங்கு பெறலாம்

*பாடல்கள் விரும்பிக் கேட்கலாம்
*உங்கள் வலைப்பூ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்
*கவிதை நகைச்சுவைகளை பகிரலாம்
அனைத்தையும் வழங்க வருகிறது வலையோசை

கானாபிரபா தமிழ்பித்தன் கூட்டுத்தயாரிப்பில் வலையோசை வானொலி தமிழ்வலைப்பூ வரலாற்றில் ஒர் மைல்கல்

குரல் வளத்துக்கு கானாபிரபா நகைச்சுவை தமிழ்பித்தன்

அறிவிப்பாளர்கள்:- வலைப்பூவின் றேடியோபதி புகழ் கானபிரபா மற்றும் உங்கள் அன்பின் செல்லப்பிள்ளை தமிழ்பித்தன்(பிழைவிட்டாலும் தண்டிக்க கூடாது செல்லபிள்ளைதானே)

*தொழில் நுட்பம் மற்றும் நேரடி ஒலிபரப்பு (தமிழ்பித்தன் கலைக்கூடம்)
*ஒலிப்பதிவு மற்றும் மீள் ஒலிபரப்பு (றேடியோஸ்பதி ஒலிக்கூடம்)


எப்படி கேட்பது
நீங்கள் கட்டாயம் ஸ்கைப் மசஞ்சர் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்
ஸ்கைப்பை தரைவிறக்க skype
(இல்லா விட்டால் மீள் ஒலிபரப்பைத்தான் கேட்க வேண்டும்)
நீங்கள் ஸ்கைப்பில் இணைந்திருக்க வேண்டும் நாங்கள் தருகின்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் எமது வானொலிக்கு அழைத்துந் செல்லப்படுவீர்கள்
அங்கே சென்று நீங்கள் கேட்க மட்டும் விரும்பினால் கேட்டுக்கொண்டு இருக்கலாம் எங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் மசஞ்சரின் வலது மூலையில் காணப்படுகின்ற talk என்பதை அழுத்த நீங்கள் waiting என்பதற்குள் அனுமதிக்க படுவீர்கள் பின் கட்டுப்பாளர் உங்களை தெரிவு செய்து உள்ளே நுழைய அனுமதிப்பார்

ஸ்கைப் வசதியில்லாதவர்கள் பின்னூட்டத்தினுடாக கருத்துகளையும் வாழ்த்துகளையும் சொல்லி பாடல்களையும் விரும்பிக் கேட்கலாம்


அடித்தளம் இட்ட விடயம்
நாம் முதலில் விண்டோஸ் பிளேயர் ஊடாகவே ஒலிபரப்புவது என்று இருந்தோம்

அதைவிட்டு விலகியமைக்கு காரணம்
அதன் ஒலிபரப்பில் தெளிவின்மை(24kb/s)
குறைந்த பார்யைாளரை மட்டுமே ஏற்கும்(75)
அதிக தொழில் நுட்பத்திறன் வேண்டும் (ஒலிபரப்பின் போது தனிய இதனுள்ளே முடங்க வேண்டும்)

இதை தெரிவு செய்ததற்கான காரணங்கள்
மிகத்தெளிவான ஒலிநயம்
நேயர்களை இணைப்பது இலகு
ஒரே நேரத்தில் 5 பேர் வரை கலந்துரையாடலாம்
வரையறையற்ற பார்வையாளர்கள்



இது தற்சமயம் பரிசார்த்த ஒலிபரப்பு
இங்கே அழுத்தி இணையுங்கள்

உங்கள் ஏமாற்றத்தை தவிர்க்க பின்னூட்டத்தில் உங்கள் skype ¸பெயரை இடவும் இதனால் உங்கள் ஏமாற்றம் தவிர்க்கப்படலாம்

புதுப் பொலிவுடன் ijigg என்ற ஒலிப்பதிவுத்தளம்

Written by தமிழ்பித்தன் on 11:44 PM

தமிழ் வலைப்திவர்கள் பலரால் விரும்பி பயன்படுத்ப்படும். ஒலிபதிவுத்தளமாகிய
www.ijigg.com இது இப்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள்
*playlist உருவாக்கலாம்
*கேட்கிறவற்றை நேரடியாக தரவிறக்கலாம்
*இலகுவான பதிவேற்றம்
*இலகுவான கையாள்கை




நான் முன்பு செய்த அறிவித்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்னும் 4 அல்லது 5 மணித்தியாளங்களில் அதற்கான விபரங்கள் அனைத்தும் வெளிவர இருக்கிறது
முன்பு செய்த அறிவித்தல் இங்கே

documentகளை காட்சிப்படுத்த

Written by தமிழ்பித்தன் on 8:58 PM

உங்களிடம் உள்ள document களை காட்சிப்படுத்த நினைக்கிறீர்களா?

  • .doc (Microsoft Word)
  • .pdf (Adobe Acrobat)
  • .txt (Plain text)
  • .ppt, .pps (Microsoft Powerpoint)
  • .xls (Microsoft Excel)
  • .ps (Adobe postscript)
  • .lit (MS reader ebook)
  • .rtf (Rich Text Format)
  • .odt, odp, etc. (Open Office)
  • .sxw, sxi, etc. (Open Office)

இதோ உங்களுக்கு உதவுகிறது இத்தளம்..



ஒருத்தர்
திருமந்திரத்தை இப்படி காட்சிப்படுத்தியிருந்தார்..




ஆங்கில மற்றும் சில மொழிகளின் கோப்புகளை அது தானாக வாசிக்கிறது. அங்கே பதிவேற்றிய கோப்புகளை நீங்கள் விரும்பிய வடிவில் தரவிறக்கலாம். (mp3 வடிவம் உட்பட)
சரி திருமந்திருத்தை கேட்கலாம் என்றால்? அது இப்படி வாசிக்கிறது ஏ ஏச் சீ .

கொசுறு்-நான் அடிக்கடி எழுத்துப்பிழை விடுவது வழக்கம். அதற்க்கு ஒர் நண்பன் என்னை திட்டி விட்டார். அதற்காக முதல் முறையாக நான் மீண்டும் சரிபார்த்து வெளிவிடுகிறேன். (நான் எழுதுறதை விட மீள் சரிபார்க்க நேரம் கூட எடுத்துச்சு



நடக்கப் போவது என்ன?

Written by தமிழ்பித்தன் on 12:37 AM

உலக வலைப்பூ வரலாற்றிலேயே முதல் தடவையாக ஓர் சாதனை நிகழஇருக்கிறது
ஆமாம் உலகின் வடதுருவமும் தென்துருவமும் இணைந்து வடதுருவத்தின் எல்லைப்பகுதியிலிருந்து தமிழ்பித்தனும் தென்துருவ எல்லைப்பகுதியிலிருந்து கானாபிரபாவும் இணைந்து அந்த பெருமுயற்சில் இறங்கியிருக்கிறார்கள் வெகு விரைவில் அது பற்றிய மேலதிக செய்தி வெளிவரும் எதிர்பார்த்துக்காத்திருங்கள் அந்த அறிவிப்பை
என்னவாக இருக்கும் என்று நீங்களும் ஊகிக்கலாம


கொசுறு:-அதற்கான ஏற்பாட்டில் இருப்பதால் வழமையான எனது இணைய அறிமுகங்கள் இல்லாது இருக்கலாம் அல்லது குறைவடையலாம் மன்னிக்கவும்

சில பயன் மிக்க தளங்கள்

Written by தமிழ்பித்தன் on 7:01 AM



http://www.chesspark.com/ நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு சென்று ஒன்லைன்லில் விளையாடலாம் இங்கே பல தரமாக பிரித்துள்ளார்கள் விரும்பிய தரத்தை தெரிவு செய்து விளையாடலாம்






http://www.pdffiller.com/ உங்களிடம் உள்ள பைலை ஆக மாற்றி தரும்



http://www.30gigs.com 30gb கொள்ளவு கொண்ட மின்னஞ்சல்




http://www.5min.com/ தன்னை முதல் வீடியோ விக்கிபீடியா என்று கூறுகிறது


http://www.imgppl.com/ நீங்கள் வைத்திருக்கும் போட்டோவுக்கு vote எடுப்பு நடத்தலாம்